نو நாடார் - உள்நாட்டு வாணிகத்திலும் - குறிப்பாகவும் சிறப் பாகவும் உணவுப் பொருள் விற்பனையில் -1930-க்குப் பிறகு தீப்பெட்டி, வாண. கவின் அச்சுத் தொழில் களிலும் புகழ் பெற்றிருப்பது நாடார் சமூகம் ஆகும். தமிழ்நாடு முழுவதும் வாழும் நாடார் தொகை 10 லட்சம் இருக்கலாம். இவர்களுள் சில நூறாயிரம் நாடார் 18,19-ஆம் நூற்றாண்டுகளில் கிறித்தவர் ஆயினர்; அவ்வாறு சமயம் மாறியவர்கள் தம் இனப் பெயரையோ, திருமணம் முதலியவற்றில் தம் இனத் தொடர்பினையோ கைவிட்டு விடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இம்மாவட்டத்தில் சாத்தூர் வட்டமே இவர் களுடைய தாயகம் ஆகும். தம் கடும் உழைப்பாலும் முயற்சியாலும் அரசியல் செல்வாக்காலும் இன் ஒற்றுமையாலும் கல்விப் பெருக்கத்தாலும் இவர்கள் தமிழ்நாடெங்கும் பரவியிருக்கின்றனர். இம்மாவட் டத்திலும் எல்லாப் பகுதிகளிலும் இவர்கள் வாழ்ந்து உயிர்நாடியான பொருள்களை விற்று வருகின்றனர். பொருளாதரத்தின் அச்சாணியாக இவர்கள் விளங்கு கின்றனர். ஆதியில் பனைமரம் ஏறுதல் போன்ற தொழில்களில் சிலர் ஈடுபட்டிருந்ததால் இவர்கள் கோவில்களுக்குள் சென்று வழிபட, நெடுங் காலமாக தடை இருந்து வந்தது. இதுபோன்ற காரணங்களால் தேவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே கைகலப்பும் கலகமும் நடை பெற்றன. இவற்றை அடக்கக் கமுதி சிவகாசி போன்ற நரகங்களுக்கு 1910-ம் ஆண்டு அளவில் வந்த ஆயுதம் தாங்கிய படைகள் இன்றும் தங்கி நிலைத்திருப்பதை அங்கே காணலாம்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/92
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை