பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 1 9 அஞ்சுவண்ணத்தினர் தொடர்பு கொண்டும்' தற் காலிகமாக அல்லது நிரந்தரமாக தங்கி இருந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலும் கிழக்கு கடலில் கிடைத்த முத்துக்கள் அவர்களைப் பெரிதும் கவர்ந்து இருத்தல் வேண்டும். இராமேசுவரம் முத்துக்கள் என்ற வகைப்பரல்கள் கொல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து அரபு நாடு களுக்கும் சீனம் லயாம் போன்ற கீழ்த்திசை நாடு களுக்கும் அனுப்பப்பட்டதாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்து அரபு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் பதியிைரம் குதிரைகள், தேவிபட்டினம், பெரியபட்டி iனம், காயல்பட்டினம் வழியாக கரை இறக்கப்பட்டன. அவைகளைக் கண்காணிப்பதற்கு மாறவர்மன் குலசேகர பாண்டியனது அமைச்சர் சுல்தான் ஜக்கியுத்தின் பொறுப்பில் சிறப்பான அமைப்புகள் செயல்பட்டன. இந்த அமைச்சரும் ஒரு இசுலாமியர். அரபு நாட்டைச் சேர்ந்த பெருவனிகர். அவரது மகன் சுல்தான் சிராஸுதீன். பெரியபட்டினத்தில் தமதுகுடும்பத்துடன் நிலைத்து வாழ்ந்ததை வரலாற்று ஆசிரியர் அமீர்குஸ்ரு பிெ 1318 ல் குறித்து வைத்துள்ளார். இத்தகைய வாணிபத்தி ல் அரபுநாட்டு இசுலாமியர் பண்டமாற்றுமுறை நடைமுறையில் இரு ந் த த மி ழ் நாட்டில், தங்கள் ந ா ட் டு நாணயங்களானதினர் (த்ங்கம்). திர்கம்(வெள்ளி) ஆகிய நாணயங்களே பண்ட மாற்றுக்குப்பதிலாக செலாவணியில் முதன்முறையாகப் பயன்படுத்தினர். அவை பாண்டியநாடு முழுவதும்பதி ன்ைகாம் நூற்றாண்டுவரை புழக்கத்தில் இருந்து வந்தது குறிப்பிடத் தக்கதாகும். இந்த அராபிய வர்த்த