பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2 5 =u Harm பெரும் இந்து சாமியார்களும் இருந்தனர். அவர்கள் தங்கள் பெயர்களை முடியப்பன், அருளப்பன் எனவும் முறையே மாற்றிக் கொண்டனர். முடியப்பன் என்ப வரிடம் இருந்த சில அரிய ஆற்றல்களினல் - தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் திறன்காரணமாக - கிறித்துவ சமயப் பிராரம் வலுவடையும் சூழ்நிலே நிலவியது. - கிபி 1665ல் சேதுபதி மன்னரது தளபதி ஒருவர் கிறித் துவமதத்தை தழுவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யதுடள், இந்து-கிறித்துவ சமயவாதிகளிடம் பிணக் கும் பூசலும் வளர்வதற்குக் காரணமாகவும் இருந்தது இதல்ை, கிபி 1669இல் கிறித்துவ, கிறித்துவசமய அனுதாபிகள் மீது கடுமையான நெருக்குதல்கள் ஏற்பட்டன. * - இந்தச் சூழ்நிலையில் போர்ச்சுகல் நாட்டு சமயப்பிரச் சாரகர் ஜான்-டி-பிரிட்டோ கிபி 1686ல் மறவர் சீமைக்குள் தஞ்சைப் பகுதி வழியாக நுழைந்து வெள்ளான்குளம், பனங்குடி, பாகணி ஆகிய ஊர்களில் சமயப்பிரசாரத்தைத் தொடங்கினர். இதல்ை சீற்றங் கொண்ட பிரதானி குமாருப்பிள்ளே அவரையும் அவரது இரு சீடர்களையும் கைது செய்து, சிததிர வதைக்கு ஆளாக்கினர். சிறிதும் மனந்தளராத அந்தச் சமயத் தொண்டர்களது உறுதியைக் கண்ட பிரதானி அவர்களே இராமநாதபுரம் அரசரது விசா ரணைக்கு அனுப்பி வைத்தார், ஏசுமதம் பற்றிய விளக்கங்களைக் கேட்டறிந்த மன்னர் கிழவன் சேதுபதி அந்தத் தொண்டர்களை எச்சரித்து விடுதலை செய்தார் அத்துடன் தமது முதல் முயற்சியில் வெற்றி கண்ட ஜான்-டி-பிரிட்டோ தாயகம் சென்றுவிட்டு, 隼。