பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 31 பெற்றுள்ள பல்வேறு வகையான விலைமதிப்பில்லாத காதோர அணிகலன்களும், கங்கனம்(வளையல்) ஆகிய வைகளேயம் இங்கு பழக்கத்தில் ஈடுபடுத்தியவர்களும் இவர்கள்தான். நாயக்கர் தன்மை என்ற பொருளில் நாயக்கர் என்ற சொல் அமைந்திருந்தாலும், நாளடை வில் இந்த மாவட்டத்திலுள்ள வடுகர்களை மட்டும் சுட்டும் குழு உக் குறியாக உள்ளது. O மறவர் போரெனில் புகலும் புனை கழல் மறவர்' என புறப்பாட்டும், பகையெனில் கூற்றம் வரினும் தொலையான்' என கலித்தொகையும் சிறப்பித்துக் கூறுகின்ற மறவர் குடிமக்கள் இந்த மாவட்டத் தைச் சேர்ந்தவர்கள்.இராமநாதபுரம், முதுகுளத்துார், கமுதி, திருவாடானை சிவகங்கை வட்டங்களில் பெரும்பான்மையினராக இவர்கள் வாழ்ந்து வரு கின்றனர். தமிழ் மாநிலத்தின் ஐவகைத் திணைகளில் ஒன்ருன பாலைத் திணையின் பண்புகள் அனைத்தையும் வாய்க்கப் பெற்ற இந்தப் பெருங்குடி மக்களை இந்த மாவட்டத்தின் தொன்மையான குடிகள் எனக் கொள்ளுதல் பொருத்தமாகும். பிறப்பினல் பெரு மிதமும், போர் ஆற்றலில் பெருவிருப்பும், பழி கொள்ளும் மான உணர்வும் மிக்க இந்த மக்கள் மாற்ருனுக்கு மண்டியிட்டது கிடையாது. தங்களது மரபினரான பாண்டிய சோழ, சேதுபதி மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் மட்டும் இவர்கள், அவர்களுக்கு