பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செட்டிகள் இந்தப் பெயரில் வழங்கப் பெறும் சமூகத்தினர் நான்கு வகையினர் இந்த மாவட்டத்தில் உள்ளனர். அவர்கள் நாட்டுக் கோட்டை அல்லது நகரத்தார், மஞ்சப்புத் துார் அல்லது ஆயிரவைசியர், தெலுங்குச்செட்டி அல்லது கோமுட்டி செட்டி, வேளாண் அல்லது வெள் ளாளச் செட்டி எனப்படுவர். தங்கள் இயற்பெயரின் தொடர்பாக செட்டி அல்லது செட்டியார் என்ற சொல்லேயும் இணைத்து அவர்கள் வழங்கி வருகின்றனர். இந்தச் சொல் தமிழ்ச்சொல் அல்ல. தமிழில் வந்துள்ள திசைச் சொல்லாகும். சிரேஷ்டி என்ற வடசொல்லின் திரிபு என்றும் எட்டி என்ற தமிழ்ச் சொல்லின் விக ரம் தான் செட்டி என அறிஞர்கள் கருதுகின்றனர். 1. நகரத்தார் இது நாட்டுக்கோட்டைச் செட்டிகளைக் குறிப்பதாகும். முந்தைய தமிழ்ச் சமுதாயத்தின் வணிகப் பிரிவினர் களின் குடியிருப்பு நகரம் என்றும் நேமம் எனவும் குறிக் கப்பெற்று வந்தது. அந்த மரபினரின் வழியினர் ஏன் பதற்காகவே இவர்கள் நகரத்தார் என வழங்கப்பெற் றனர். இந்த மாவட்டத்தில் திருப்புத்துார், க ரை குடி, தேவகோட்டை, சிவகங்கை ஆகிய வட்டங்களில் இவர்கள் ஆங்காங்கு வாழ்ந்து வந்த பொழுதிலும் இவர்களது பூர்வீகம் சோழவளநாட்டு பூம்புக ர் எனச் சொல்லப்பட்டு வருகிறது. ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன்னர் புகார் நகரம் கடற்கோளிளுல் அழிவு எய்திய பொழுது, அங்கிருந்து வெளியேறிய மக்கள் கூட்டத் தொகுதியினரின் வழியினராக இவர் கள் கருதப்படுகின்றனர். தென் புலத்தில் பாண்டிய நாட்டில் வைகை ஆற்றுக்கு வடக்கேயும், பிரான்