பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 உரியதாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்வரை நம்பி இருந்தனர். அதன் காரணமாக இவர்கள், இந்து சமயவாதிகளால் தீண்டப்படாதவராகப் புறக்கணிக் கப்பட்டு நடத்தப்பட்டனர். சமுதாய சமத்துவத்திற் காக இந்த சமூகத்தினர் மேற்கொண்ட கிளர்ச்சி யொன்று இந்த மாவட்ட வரலாற்றில் அல்லாமல் இந்த நாட்டு சமூக இயக்கங்களின் முன்னேடியாக என் றென்றும் விளங்கும் என்பது திண்ணம். அந்த வரலாற்று நிகழ்ச்சி 14. 5. 1897 இல் கமுதியில் நடைபெற்றது. அன்று சானர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் திரண்டு எழுந்தவர்களாக, அங்குள்ள விசுவ நாத ஆலயத்திற்குள் நுழைந்து இறைவழிபாட்டை நடத்தினர். இறைவனை வழிபடுவதற்கு ஏனைய மக்கட் பிரிவைச் சேர்ந்தவர்களைப் போல தங்களுக்கும் சம உரிமை உண்டு என்பது சானர்களது கோரிக்கை. இந்தப்புரட்சி நடவடிக்கையால் தங்களது ஆலயத்தின் புனிதம் பாதிக்கப்பட்டு விட்டதாக ஆலய நிர்வாகி யும் மற்றவர்களும் சேர்ந்து ஆலயத்தை அடைத்து விட்டு, மாவட்ட வழக்கு மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கின் தீர்ப்பு ஆலய நிர்வாகி களுக்கு சாதகமாக அமைந்து விட்டது. ஆகம விதி களுக்குப் புறம்பாக சானர்களது ஆலயப் பிரவே சத்தை அனுமதிக்க இயலாது என்று இந்த மக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு தொடுத் தனர். எதிரான தீர்ப்புத்தான் அங்கும் கிடைத்தது. இறுதியாக, இந்தியர்களுக்கு அப்பொழுது மிக உயர்ந்த நீதி வழங்கும் அமைப்பாக இருந்த இங்கி லாந்தில் இருந்த பிரிவுகவுன்சிலுக்கும் மேல் முறையீடு செய்தனர். அங்கும் எதிர்பாராத தீர்ப்புதான் கிடைத்