பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளராஸ்டிரர் அல்லது பட்ால்கா இந்த மாவட்டத்தில் உள்ள மிகச் சிறுபான்மையோரில் ஒரு பிரிவினர் செளராஸ்டிரர் இவர்கள் இராமநாத புரம், பரமக்குடி ஆகிய இரு நகரங்களில் மட்டும் உள்ளனர். சாதாரணமாக இவர்கள் பட்டு நூல் காரர் கள் என்றே அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பல விதமான நெசவாளிகள் இருந்து வந்த பொழுதிலும், அவர்களினின்றும் இவர்களைப் பிரித்துக் காட்டு வதற் காகவே இவர்கள் இங்ங்ணம் அழைக்கப்பட்டனர். இவர்களைப்பற்றிய பழமையான செப்திகளில் ஒன்று இவர்கள் வடஇந்தியாவில் மத்ராவில் இருந்து குஜராத் தில் குடியேறினரென்றும் பின்னர் பன்னிரண்டு பதின் மூன்ருவது நூற்ருண்டுகளில் குஜராத்தில் இஸ்லா மியரது படையெடுப்புகளின் பொழுது தெற்கு மேற்கு கடற்கரைகளிலிருந்து உள்நாட்டில் குடியேறினர் எனத் தெரியவருகிறது. பதினரும் நூற்ருண்டின் துவக்கத்தில் விஜயநகரப் பேராசு சிறப்புடன் விளங்கிய பொழுது இவர்கள் அந்த அரசில்குடியேறி தங்களது கைவண்ண்த் தாலும் கற்பனைத்திறத்தாலும் பேரரசரும் பாமர ரும் அணியத்தக்க புத்தாடைகளை நெய்து உதவினர் அதே அரசு பின்னர் கன்னியா குமரிவரை வியாபித்த பொழுது, இந்த மக்களும் தெலுங்கு நாட்டில்இருந்து தமிழ்நாட்டில் குடியேறினர், குறிப்பாக அவர்சள் மதுரையில் நிலைகொண்டனர். ஆடம்பரத்திலும், ஆலய விழாக்களிலும் பெரு விருப்புகொண்ட திருமலைக் மன்னரது ஆட்சியிலும் அடுத்து ராணி மங்கம்மாள் ஆட்சியிலும் அரசியல் ஆதரவு பெற்றுத் திகழ்ந்தனர்,