பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 அர்ஜூன நதி, பாம்பாறு, மணிமுத்தாறு, போன்ற பல சிற்ருறுகளும் இந்த மாவட்டத்தில் பாய்கின்றன. தென்மேற்கு, வடகிழக்குப் பருவக் காற்றுகளில்ை பெறுகின்ற பருவமழை இம்மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா ஆண்டுகளிலும் சீராக இருப்ப தில்லை. சில ஆண்டுகளில் புயலும் பெருமழையும் இருந்துள்ளன. என்ருலும் பெரும் பகுதிகள் வறட்சி யாலும், நீர் பற்ருக் குறையாலும் பெரிதும் பாதிக்கப் பட்டு பஞ்சத்தைத் தோற்றுவிப்பனவாக இருந்து வந்துள்ளன. * நாடு விடுதலை பெற்று முப்பத்தைந்து ஆண்டுகளாகி யும் இந்த அவலநிலையை மாற்றக் கூடிய திட்டங்கள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது 'மறுக்க முடியாத உண்மை. விளைபொருள் வித்து மானியம், விவசாயக். கடன், நீர்ப்பாசனம். கேணி குளங்களை ஆழப்படுத்தல், புதுக்கிணறு, கால்நடை முன்னேற்றம், வைகையாறு சீரமைப்பு ஆகிய துறை களில் கேரடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப் பட்டுள்ளதாக அரசுதரப்புப் பு ஸ் வரி விவரங்கள் சுட்டினலும், இவற்றின் முழுப்பயனும். இந் த மண்ணின் மலர்ச்சிக்காக செலவிடப்படவில்லை. இந்த உண்மையை இப்பொழுது நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் வறட்சி நிவாரணத் திட்டங்கள் விளக்குகின்றன. இந்த விபரங்களை செய்தித் தாள்களிலும், அரசு வெளியீடுகளிலும் அடிக்கடி காணமுடிகிறது. இவைபோன்று இன்னும் எத்துணையோ விபரங்களை இம் மாவட்டத்தின் வரலாறு, விடுதலைப்போர், தொழில் முன்னேற்றம், வாழ்க்கை நிலை ஆகியவைகளை-எளிதில் தெரிந்து கெர்வ வளக் கூடியதாக இல்லை.