பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 தங்கம் அல்லது வெள்ளியின் எடை எட்டுக் கழஞ்சு என்றும் இந்த முடிவை மீறுபவர்கள் சாதிநீக்கம் செய்யப்படுவர் என தீர்மானித்தது. (1382) காளமேகவரிடம் திருக்கோயிலின் மேலைக் கோபு ரத்தை அமைத்து அங்கு திருப்பணியை முதலில் துவக்கியவர் இராமநாதபுரம் மன்னர் உடையான் சேதுபதி. (1420, திரு உத்தி, கோசைமங்கை திருக்கோயிலுக்கு பாண்டி யன் மாறவர்மன் வீரபாண்டியன் நிலக்கொடை வழங்கியது. (1433) விஜயநகரப் பேரரசரா கின. சாளுவ நரசிம்மதேவர் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு யாத்திரையாக வந்தது. - (1483) விஜயநகரப் பேரரசுக்கு கட்டுப்பட்டு பரமக்குடி பாளை யத்தின் கர்த்தா தும்பிச்சி நாயக்கர், காளையன் நாட்டு வெள்ளைப்பள்ளம் என்ற ஊரை திருப்பத்துர் கோவி லுக்கு தானமாக வழங்கியது (1504) திருப்புல்லாணி திருக்கோவிலில் வி ைஅரசுகவியானது அரிச்சந்திரபுராணம் அரங்கேற்றம் பெற்றது (1524) மாவவி வானா திராயன் என்ற குறுநில மன்னன் தேவி பட்டினம் கடலடைத்த பெருமாள் ஆலயத்தை அமைத்து திலக்கொடை வழங்கியது (1533) வேதாளை கிராமத்தில் கோட்டை ஒன்றை கட்டிக் கொண்டு, இராமேஸ்வரம் செல்லும் பயணிகளிடம் தலைவரி வசூலித்து சிரமப்படுத்திக் கொண்டிருந்த போர்ச்சுக்கீசியரை, இராமநாதபுரம் சேதுபதியின் படைகளும், உள்ளூர் இசுலாமியர்களும் துரத்தி யடித்தது. o - (1549) கொச்சியிலிருந்து வந்த பெரும் போர்ச்சுகீசிய கடற்