பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 = படையும், இஸ்லாமியத் தளபதி இர ப் அலியின் கடற்படையும் கீழ்க்கரை அருகில் பயங்கர போரில் ஈடுபட்டது. (1553) கீழக்கரைப் பகுதியில் முத்துக்குளிப்பவர்கள் 100 முத்துக்கு அரைப் பணமாக அங்குள்ள பிள்ளையார் கோவிலுக்கு வழங்க திருமலை சேதுபதி மன்னர் ஆணையிட்டது. (1631) மைசூர் மன்னர் ஐதர்அலியின் ராணுவ உதவியுடன் மருது சகே தரர்கள் சிவகங்கை யை நவாப் படையின ரிடமிருந்துமீட்டு ராணிவேலு நாச்சியாரை அரசியாக அறிவித்தது | (1780) கிறிஸ்தவ மதப்பிரசாரப் பணிக்கு புனித மார்ட்டின் பாதிரியார் மறவர் சீமையில் சுற்றுப் பயணம் - - - - - - -- == (1701) இராமநாதபுரம் சீமையின் மீது படையெடுத்து வந்த ராணிமங்கம. வளது பெரும்படையையும் அதன் தளபதி நர சப்பையாவையும் இா மநாதபுரம் கோட்டை அருகே கிழவன் சேதுபதி அழித்துக் கொன்றது. (1702) மறவர் சீமையில் வெள்ளமும், புயலும் ஏற்பட்டு வைகை, குண்டாறு, மணிமுத்தாறு ஆகிய ஆறுகளில் பெருவெள்ளம், தொடர்ந்து வறட்சி, பஞ்சம். --- (1709) இராமநாதபுரம் சீமையின் இணைய்ற்ற பேரரச. க விளங்கிய கிழவன் சேதுபதியின் மரணமும் அவரது மனைவிகள், காமக்கிழத்திகள், நெருங்கின உறவினர். கள் (மொத்தம் 47 பேர்) தீக்குளித்தது. (1710) பொன்னளிக் கோட்டையில் கத்தோலிக்க ஆலயத்தை புனித மார்ட்டின் பாதிரியார் நிர்மாணித்தது சேது பதி அனுமதியுடன். (171 l)