பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173, பகுதியில் முத்துக்கருப்பத்தேவர் தலைமையிலும் தீவிர மாகப் பாவியது, தோல்வியுற்றது, புரட்கிக்காரர்கள் அனைவரும் தூக்குமேடை ஏறியது. (1801ル வரலாற்றில் முதன்முறையாக ஜில்லா கோர்ட், இராமநாதபுரத்தில் கும்பெனியரால் நிறுவப்பட்டது. (1802) பதவி நீக்கப்பட்ட விஜயரகுநாத முத்துராமலிங்க சேதுபதி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பதினைந்து ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பிறகு மரணம் (1809) அந்நிய எதிர்ப்பு நடவடிக்கையால் பதவி நீக்கப்பட்ட இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி 15 ஆண்டுகால சிறைவாசத்தில் சென்னைக் கோட்டை யில் இறந்தது. -- (1809) பழந்தமிழ் ஏடுகளைத் தேடி வந்த இலக்கியக் செல் வரும் சென்னை மாவட்ட கலைக்டருமான F. w. எல்லிஸ் சுற்றுப் பயனம் வந்தபொழுது இராமநாத புரத்தில் அகால மரணமடைந்தது. (1819) இந்த மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சிவகங் கையில் ஏற்படுத்தப்பட்டது. (1895) இராமநாதபுரம் சமஸ்தான மக ாவித்வான் ரா. ராகவ ஐயங்காருக்கு, ப ஸ்க்கர சேதுபதி மன்னர் முத்துச் சிவிகை பரிசாக வழங்கியதுடன் அந்தச் சிவிகையில் புலவரை அமரவைத்து தாமே சுமந்து, தமிழ்ப் புலவர் களையும், தமிழையும், தமது முன்னேர் போல தாமும் காத்து வருதல் கடமை என குறிப்பிட்டு மதுரையில் உள்ள பதிவு அலுவலகத்தில் பத்திரம் மூலம் பதிவு செய்து கொடுத்தது, - (1901)