பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ------------ ரங்களுக்கு மரம் பயன்படுத்தப்படாமல் அமைக்கப் பட்டிருப்பதாகும். மற்ருென்று இங்குள்ள மிகப் பெரிய வெண்கலமணியுமாகும். 8) அரியக்குடிநகர் அத்தனைபேர் அத்தனையும், வரிசைக்குடியாக வாழ்க’ என வாழ்த்தினர் ஆசுகவி முத்தப்பச் செட் டியார் இந்த ஊர் காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சங்கீதக்கலாநிதியாக விளங்கிய அரியக்குடி பூரீராமானுஜம் அய்யங்கர் அவர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து மறைந்த ஊராகும். 9) மருதுபாண்டியர்போரில் திருப்பத்துார்கோட்டை ஆற்காட்டு நவாபின் கையிலும், மருதுபாண்டியர் கையிலுமாக மாறிவாறி வந்தது, ஆல்ை இறுதித் தோல்வியை அடைந்த மருதுபாண்டியர் இந்தக் கோட்டையின் மேற்கு மூலையில் 24-10-1801 இல் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுடன் வெள்ளை மருதுவின் மக்கள் கருத்தத்தம்பி, மொல்லிக்குட்டி தம்பி சின்ன மருதுவின் மக்கள், சிவஞானம், சிவத் தத்தம்பி, அவரது மகன் முத்துசாமி, ஆகியோரும் ஒருசேர அங்குதான் துக்கிலேற்றப்பட்டனர். 10) மறவர் சீமையின் புரட்சி ஒடுக்கப்பட்ட பிறகு, பிற்பட்ட புரட்சிக்காரர்களில் 72 தலைவர்களை கும் பினியார் நாடு கடத்தி பிப்ரவரி 11, 1802 இல் பினங்கு தீவிற்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிவகங்கை அரசர் வெங்கண் ப்ெரிய உடையாத்தேவ ரும், வெள்ளை மருதுவின் மகன் சிறுவன் துரைசாமி யும் தளவாய் குமாரசாமி நாயக்கரும் அடங்குவர். 11) ராஜராஜசோழ தேவனது மகன் - ராஜேந்திர தேவன் ஆந்திர்ம், க்லிங்கம், வங்கம், மலேயா ஆகிய நாடுகளை வென்று திரும்பிய பிறகு, பாண்டிய மண் டலத்தையும், சோழப்பேரரசாக மாற்றினர். அவரது விருதுப்பெயர்களான கங்கைகொண்டான், கடாரங் கொண்டான் என்ற பெயர்களில் இந்த மாவட்டத் தில் இரண்டு ஊர்கள் உள்ளன.