பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮧ ! பெயர்களாக அமைந்து சோழ மன்னர்களது வீர வரலாற்றை மட்டுமல்லாம்ல் இ ந் த மாவட்டத்தில் அவர்களது ஆட்சி நிலைபெற்று இருந்ததையும் நமக்கு இன்றும் நினைவூட்டுவனவாக இருக்கின்றன. Ο சமணர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப்பழமையானசமயங் களில் சமணமும் ஒன்ருகும். ஆனால், இச்சமயம் தமிழகத்தில் சங்க காலத்திற்குச் சற்று முன்னதாக தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏழாம் நூற்ருண்டின் இறுதியில் தேவாரம் பாடிய மூவர் களினல் சைவம் தழைத்து எழுத்தபொழுது சமணம் தாழ்ந்தது. தேவாரப் ப கு தி க ளி ல் குறிப்பாக சம்பந்தரது பதிகங்களின் கடைசிப் பாசுரம் சமணர் களைச்சாடி பாடப்பட்டுள்ளது. மேலும் அவர்களது எளிய வாழ்க்கை, உணவு, உடை, இந்து வேதத்தையும் வேள்வியையும் மறுக்கும் மனப்பாங்கு போன்றவை களை இந்தப் பதிகங்களிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. + சமணர்களைத் தமிழ் இலக்கியங்கள் அருகர், அமணர், சாக்கியர், ஆருகதர் எனப் பலவாருகக் குறிப்பிடு கின்றன. பதினென்கீழ்க் க ண க் கு நூல்களில் பலவற்றை சமணத்துறவிகள் தான் பாடியுள்ளனர். ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்ரு ன மணிமேகலையைப் பாடியப். பெரும்புலவர் சாத்தனர் சமண நெறியைச் Fார்ந்தவர்.