பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 -- -- _ _ நிலை இருந்தது. ஏற்கனவே இராமநாதபுரம் அரசு கட்டிலில் அமரும் உரிமைக்கு உரியவரான திரையத் தேவருக்கு இப்பொழுது போர்த்துகல்நாட்டுராணுவ உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டால்? ... அடுத்து பலதாரப் பழக்கத்திற்கு முரளுனை கிறித்துவ மத ஆச்சாரத்தில்ை, திரைபத்தேவர் தமது மனைவி களில் ஒருவரான காதலி நாச்சியாரை (கிழவன் சேது பதியின் மைத்துரிை) விவாகரத்து செய்தால்? ... இந்த வினுக்களுக்கு விடைகாண்பது மன்னருக்கு எளிதாகப் படவில்லை. இவற்றிற்கெல்லாம் மேலாக இந்துமத தலைவர்கள் அருளானந்தரின் 'மந்திர சக்தி'யினுல் இந்து மதத்திற்கு ஆபத்து எனக் கூக்குரலிட்டனர். சங்கிலியால் பிணைக்கப்பட்ட அருளானந்தரும் அவரது இரண்டு சீடர்களும் அரச அவையில் விசார க்கு நிறுத்தப்பட்டனர். அரச ஆணையை மீறி மறவர் சீமையில் கிறித்துவ மத மாற்றத்தில் ஈடு பட்டதற்காக அவருக்கு மரண தண்டனை வழங்கப் பட்டது. துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கான ஏற்பாடுகளும் துவங்கின. தமது குழுவினருடன் அங்கு இருந்த திரையத்தேவர், மதம் மாறிய தம்மை முதலில் சுட்டுத் தள்ளுமாறு சொல்லிக் கொண்டு அருளானந்தரை மறைத்து நின் ருர், எதிர்பாராத இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க சிறந்த ராஜதந்திரி யான சேது மன்னர் தண்டனை யை நிறுத்தி வைப்ப தாகச் சொல்லி அவையில் இருந்து சென்றுவிட்டார். அடுத்தநாளே அருளானந்தர் பாதுகாப்புடன் ஒளியூர் கோட்டைக்கு அனுப்பப்பட்டார். அருளானந்தரை நாட்டை விட்டு வெளியேற்றலாம் என நம்பப் பட்டது. ஆனல் ஓரியூர் கோட்டை ஆளுநருக்கு சேதுபதி மன்னர் அனுப்பிய ஒலையின் படி அருளானந் தர் ஒரியூர் கோட்டைக்கு வெளியே தமது இறுதிப் பிரார்த்தனையை முடித்தவுடன் கொலே செய்யப்பட் டார். 4-2-1693ல் இறையுணர்வும், இனிய அன்பும் நிறைந்த அவரது புனித உடலில் இருந்து பொங்கி வழிந்த குருதி, வறண்ட அந்த மண்ணை மறைத்துச் சிவப்பாக்கியது. சேது நாட்டில் புதிய சமய வழியின் ஒளியை உள்ளடக்கிய அந்தச் சிவந்த மண்ணே, அந்த வழியைப் பற்றி நிற்கும் பல்லாயிரம மக்கள் ஆண்டு