பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I & 1. சாளுவ நரசிம்மன் கி. பி. 1483' 2. நரஸ் நாயக்கன் Ջ. լԳ. 1499 3. சளுக்க ராஜூ திருமலை கி. பி. 1534 இதிகாசத்தோடு தொடர்பு கொண்ட திருத்தலமாக இவ்வூர் திகழ்வது ஒருபுறமிருக்க, மதுரை திருமலை நாயக்க மன்னர் இங்கு ஒரு தேவாலயம் கட்டவும் பாம்பனுக்கும் தொண்டிக்கு மிடையே ஏழு கோயில் கள் கட்டவும் கி.பி. 1623 இல் அனுமதி கொடுத்தார், அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் 1894 இல் அனைத்துலக சமயங்களின் மாநாட்டில் இ ந்து சமயப் பிரதிநிதியாக சுவாமி விவேகானந்தர் கலந்து கொண்டார். சேதுபதி மன்னரின் பொருளாதார, உதவியோடு அமெரிக்கப் பயணத்தை முடித்துத் திரும்பிய சுவாமிகள் 21-1.1897 இல் சேதுமன்னரின் துறைமுகம்ாகிய பாம்பின்ரில் கரை இறங்கி இராமேஸ் வரம் சென்ருர். சிறப்பானதொரு வரவேற்புக்குட் பின்னர், சுவாமிகளை ஒரு சிறிய கைவண்டியில் அமரச் செய்து தாமே அவ்வண்டியை இழுத்தவாறு' திருக்கோயிலுக்கு பாஸ்கரசேதுபதி மன்னர் அழைத்து. சென்ருர். 1947 ஜனவரி 27 ஆம் தேதி இராமேஸ்வரம் திருக் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. 1966 இல் இந்திய வம்சாவளியினரை இங்கு கொணர ஏதுவாக துறைமுக வ ச தி ஏற்படுத்தப் பட்டது. இராமேஸ்வரம் ஆல்யத்திற்கு வருகை புரிந்தவர் களில் முக்கியமானவர்கள்: 1. இந்திய ஜனதிபதி ராஜேந்திரப் பிரசாத் 2. இந்தியஜனதிபதி சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்