பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்துரை 'இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்றுக்குறிப்பு கள் என்ற இந்நூல் லெனின் சமூக வரலாற்று ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் வெளியீடு, கல்வித் துறை அங்கீகாரம் இல்லாத. கல்வித் துறையின் உதவி பெருத ஒரு சிறிய ஆராய்ச்சி நிறுவனத்தின் பேரார்வத்தின் விளைவாக இந்நூல் உருப்பெற் றுள்ளது. ஒரு மாவட்டத்தின் வரலாற்றுக் குறிப்பு கள் அனைத்தையும் தொகுத்து தருவது இத்தகைய சிறிய நிறுவனத்திற்கு இயலாது என்றாலும் கூட இந்நிறுவனம் தொகுத்துத் தந்துள்ள வரலாற்றுக் குறிப்புகளே நோக்கும்போது கண்கள் ஆச்சரியத் தால் விரியத்தான் செய்கின்றன. காலமின்மை போன்ற காரணங்களில்ை இந்நூலில் கூடுதலான விவரங்களுக்கு இடமளிக்க இயலவில்லை" (பக்.7) என இந்நூலின் ஆரம்பத்திலேயே கூறப்பட்டு விட்டதால் முழுமையான தகவல்களை எதிர்பார்ப் பதில் நியாயமில்லை. ஆனலும் லெனின் என்ற மாமேதையின் பெயரால் அமைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் வெளியீடு என்ற எண்ணத்தில் சில எதிர்ப்பார்ப்புகளோடு இந்நூலைப் படிப்போர் ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள். பதினெட்டாம் நூற்ருண்டின் இறுதியில் வெடித்த இராமநாதபுரம் சீமைப் புரட்சியில் இந்த ஊர் மக்கள் சிறப்பு பங்கு