தந்தையும் இராமனும்ே 83 ஆதியில் காசிபிராந்தியத்தின் ராஜாவாகத்தான் இருந்தான். புத்த சாதகக் கதைகளில் தசரதன் காசி அரசனாகத் தான் குறிப்பிடப்பட்டுள்ளான் என்று முன்னரே எழுதியுள்ளோம். அவன் முதல் மனைவியாகிய கெளசல்யை கோசல நாட்டு மன்னன் மகளாவாள். அவளை மணந்ததால் ஆண் வாரிசு இல்லாத கோசல நாடு தசரதனுக்குக் கிடைத்தது. அயோத்தியில் சிற்றரசனாக இருந்த தசரதனுக்கு மனைவியின் மூலம் கிடைத்த பெருஞ்சொத்தாகும் கோசலம். தசரதனுக்குப் பின் கோசலை வயிற்றில் யார் பிறக்கிறானோ அவனுக்குத் தான் கோசலம் சொந்தம். நீண்ட காலம் மகப்பேறின்மையின் இந்தச் சட்டம் அனைவருடைய மனத்திலிருந்தும் நீங்கி விட்டது. பின்னர் ஒருகாலத்தில், கைகேயியை மணக்கும் பொழுது அவள் வயிற்றில் மகன் பிறந்தால் அவனுக்குக் கோசலத்தைத் தருவதாகக் கேகேய மன்னனுக்குத் தசரதன் வாக்குக் கொடுத்திருந்தான். இந்த வாக்கை அவன் கொடுக்கும் பொழுது கோசலைக்குப் பிள்ளை இல்லை யென்றதால் அது தவறாகப்படவில்லை. பின்னர் பிள்ளைகள் பிறந்தனர். கோசலையின் மகனாக இராமன் தோன்றினான். நியாயப்படி கோசலம் அவனுக்குரியது. எனவே, இடைக் காலத்தில் கைகேயின் தந்தைக்குக் கொடுத்த வரத்தை மீறி இராமனுக்குக் கோசலத்தைத் தரப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டான் தசரதன். கே.கய மன்னனுக்குத் தசரதன் வாக்களித்திருந்ததை அனைவரும் மறந்துவிட்டனர். இந்த நிலையில் வசிட்டனுக்குத் தசரதன் கொடுத்த வாக்களிப்பு நினைவில் இருந்தாலும், அது தவறு என்பதை வசிட்டன் உணர்ந்திருந்தான். கோசலைக்குப் பிள்ளை இல்லாமலிருந்தால் அந்த வாக்களிப் புக்குச் சக்தி உண்டு. இப்பொழுது கோசலைக்கு ஆண் பிள்ளைப் பிறந்துவிட்டதாலும், அவன் மூத்த பிள்ளை யாகவே பிறந்துவிட்டதாலும் கோசலம் இராமனுக்குப் போவதை யாரும் தடுக்கமாட்டார்கள். அந்த நியாயத்தை அறிந்திருந்ததால்தான் வசிட்டன் இப்பொழுது வாயை மூடிக் கொண்டிருந்து விட்டான். இராமனும் இதுபற்றி ஒரளவு அறிந்திருக்க வேண்டும். தாய்வழிப் பாட்டனார் சொத்து
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/101
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை