86 38 இராமன் - பன்முக நோக்கில் யாகப் பயன்படுத்தினர். இவற்றையெல்லாம் நன்கு அறிந்த இராமன், தந்தையின் மனநிலையில் உள்ள பெரிய தவற்றைப் போக்க நினைக்கிறான். தந்தையைத் தெய்வமாகக் கருதி வழிபடும் இராமன், தந்தையின் தவற்றை எடுத்துக்காட்டித் திருத்த இயலாது. எனவே, மிக அற்புதமான ஒரு வழியைக் கையாண்டு இரண்டு காரியங்களைச் சாதித்து விடுகிறான் இராமன். ஒன்று, கைகேயியைத் தான் தெய்வம் என்று மதிப்பதாகக் கூறினால், தசரதன் வெறுப்புணர்ச்சி அடங்கும். ஏனென்றால், அவள் வரத்தால் நேரிடையாகத் துன்ப முற்றவன் அவன்தானே? எனவே, அவளைத் தான் தெய்வம் என்று மதிப்பதாகக் கூறுகிறான். இரண்டாவது, அதைவிட நுணுக்கமான பொருள் ஒன்றும் உண்டு. கைகேயி என் தாரம் அல்லள், பரதன் என் மகனும் அல்லன். ஆகான் உரிமைக்கு (எனக்கு ஈமக்கடன் செய்ய அவனுக்கு உரிமை இல்லை என்று கூறிய தசரதனைப் பார்த்து "நீ அவளை மனைவியாக ஏற்றுக்கொள்' என்று சொல்வது பொருத்தமாக இராது. எனவே, மிக நுண்மையான தன் அறிவைப் பயன்படுத்தி இதே காரியத்தைச் சாதித்து விடுகிறான், இராமன். - - ‘என்னிடம் ஏதாவது வரம் பெற்றுக்கொள்வாயாக' என்று தசரதன் வேண்டிய பொழுது, இராகவன் கேட்கும் வரம் அவனை ஒரு மாமனிதனாகவும், விருப்பு வெறுப்பற்ற இறைவனாகவும் உயர்த்திக் காட்டுகின்றது. தியள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும், தாயும் தம்பியும் ஆம் வரம் தருக! எனத் தாழ்ந்தான்; வாய்திறந்து எழுந்து ஆர்த்தன, உயிர் எலாம், வழுத்தி - கம்ப. 10079 தசரதன் மனைவி, மகன் என்று ஏற்றுக்கொள்ளாத வரையில் இராமன் அவர்களைத் தாய், தம்பி என்று தசரதன் எதிரே கூறமுடியாது. எனவே, அவனை ஏற்றுக்கொள் என்று சொல் வதற்குப் பதிலாக, "கைகேயி என்ற என் தெய்வமும், அவள்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/104
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை