தந்தையும் இராமனும்ே 87 33 மகனும் எனக்குத் தாயும், தம்பியும் ஆகுமாறு வரந்தருக என்று கூறி, தான் யார் என்பதைத் தசரதனுக்கு உணர்த்தி விட்டான் தனயன். அவனுடைய சொற்கள் மனிதருள் மகாத்மாவான ஒருவன்தான் பேசமுடியும் என்பதால், உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் அவனை வாழ்த்தின என்று பேசுகின்றான் கம்பன். அண்டத்தில் உள்ள எல்லா உயிர்களும் ஒருவனை வாழ்த்தின என்றால் அவன் யாராக இருக்க முடியும் எல்லா உயிர்களும் வாழ்த்துவது இறைவன் ஒருவனைத்தான். எனவே, உயிரெல்லாம் வாழ்த்தின என்று கம்பன் சொல்லும்போது இராமன் பரம்பொருள் என்ற உண்மையை மறைமுகமாகச் சொல்கிறான் என்பதை மனங் கொள்ள வேண்டும். தந்தையால் பாசம் வனத்திடை வைகும் இராகவனைக் கண்டு அவனை மீட்டுக் கொணர்ந்து பட்டம் ஏற்கச் செய்யும் நோக்கத்துடன் நேர்மையின் ஆணியாம் பரதன் தாயருடனும், வசிட்டனுட னும் வந்து இராமனைக் காண்கிறான். பட்டம் ஏற்ற கோலத்துடன் தன்னைக் காண வருவான் என்று எதிர்பார்த் திருந்த இராமனுக்கே அதிர்ச்சி ஊட்டும் வகையில் துறவுக் கோலம் புனைந்துவந்த பரதனைக் கண்டு எல்லையற்ற அன்பு காரணமாக அவனைத் தழுவிக் கொள்கிறான், இராமன். உயிர் உண்டோ என்று ஐயுறுமாறு இளைத்து, சோர்ந்து துறவுக் கோலத்துடன் தன்னை வணங்கி எதிரே நிற்கும் இளவலைக் கண்டான். அருளுக்கே ஒர் உறைவிடமான இராமன். அவனைக் கட்டித் தழுவிய இராமன் கண்களி லிருந்து ஆறாய்ப் பெருகும் கண்ணிர் பரதனின் சடையை நனைத்துவிட்டது. (2428) 'பரதன், இராமன் இருவர் கண்களும் அன்பு காரணமாகக் கண்ணிரைப் பொழிகின்றன. இப்பொழுது இராமன் பரதனை இறுக அணைத்துக்கொண்டான். இருவருடைய திருமேனிகளும் கரிய நிறத்தவாம். ஒருவரை
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/105
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை