88 38 இராமன் - பன்முக நோக்கில் ஒருவர் அணைத்து நிற்கும் அக்காட்சியை மனக்கண்ணில் காண்கிறா, கவிஞன். இராமனும், பரதனும் கவிஞன் கண்ணில் இருந்து மறைகின்றனர். இரண்டு மாபெரும் பண்புகள் வடிவுபெற்று ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டு நிற்பதாகக் கவிஞன் காண்கிறான். அவை என்ன பண்புகள்: இதோ கவிஞன் விடை கூறுகிறான்: SzSLS S 00S SCCS யாயம் அத்தனைக்கும் ஒர் நிலையம் ஆயினான் - அத்த ஆ தயாமுதல் அறத்தினைத் தழிஇயது என்னவே" - கம்ப. 2429 நியாயம் என்ற பலபொருள் குறித்த இச்சொல்லுக்கு, நீதி, வாய்மை, நன்னெறி, கட்டுப்பாடு என்ற பொருள்களும் உண்டு. எனவே, இத்தனை பொருள்களையும் உள்ளடக்கிய நியாயத்திற்கு இருப்பிடமாக உள்ளவன் இராமன் என்ற கருத்தில்தான் "நியாயம் அத்தனைக்கும் ஒர் நிலயம் ஆயினான்" என்கிறான். இதனைக் கூறியவுடன் இங்குக் கூறப்பட்ட பண்பிற்கு இரக்கம் என்ற குணம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நேர்மையும் நீதியும் வழங்கப்படும் பொழுது அங்குக் கருணை இடம் பெறுவது கடினம். இதனை உணர்ந்த கவிஞன் இராமனுடைய ஒரு பகுதியைமட்டும் இவை குறிப்பதால் அவனுடைய மற்றொரு பகுதியாகிய அருள் உடைமையையும் இதனுடன் சேர்த்துச் சொல்ல விரும்பித் தயாமுதல் வடிவாகவும் இராமன் உள்ளான் என்று பேசுகிறான். நியாயம், தயா என்று சொல்லப்படும் அருளோடு சேர்ந்து பயன்படும் பொழுது அது இணையற்ற சிறப்பைப் பெறுகிறது. எனவே, இராமனை நியாயம் அத்தனைக்கும் நிலயமாகவும், தயா முதலாகவும் உருவகிக்கிறான். உலகம் போற்றும் ஷேக்ஸ்பியர் வெனிஸ் surrågåsår grasp (5trl-offsi “Justice tempered with mercy என்று கூறுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/106
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை