தந்தையும் இராமனும்ே 89 தழுவிக் கொண்ட பரதனிடம் மன்னன் வலியனோ” என்று இயல்பாகக் கேட்கிறான் இராகவன். அவ்வினாவிற்கு விடை கூற வந்த பரதன். "ஐயனே! நின்பிரிவு என்னும் பிணி அரசனைப் பற்றிக்கொள்ள என் தாயின் வரம் காலன் வடிவாக வந்து அவனைக் கவர்ந்து சென்றது” (243) என்று விடையிறுத்தான். சற்றும் எதிர்பாராத இந்தச் செய்தி கேட்ட இராமன் கலங்கினான், துடித்தான், கீழே விழுந்து அவசமுற்றான். பின்னர் ஒருவாறு தேறிப் புலம்பத் தொடங்கிவிட்டான். “ஒளிவிளக்குப் போன்ற தலைவனே ! உலகத்தால் அனைவருக்கும் தலைவன் போன்றவனே! அறம், தயை என்ற இரண்டிற்கும் இருப்பிடமாக இருந்தவனே! நீ இறந்துவிட்டாயல்லவா? வாய்மை காப்பவர் என்ற பெயருக்கு அருகதை உடையவர்களை எங்கே காணப்போகிறேன்" (2484). "தந்தையே! அரசை எம்பால் தருவது பற்றி மந்திரி சபையில் பேசும்பொழுது இந்தப் பாரத்தை நான் ஏற்றுக் கொண்டால் வனத்திடைச் சென்று தவம்புரிந்து, ஐந்த இந்திரியங்களையும் அடக்கப் போகிறேன் என்று சொன்னிர்களே! இதுவோ அதைச் செய்யும் முறை". (2437) "அரசே! நாட்டை விட்டுக் காட்டில் வந்துள்ளேன் என்ற சொற்களைக் கேட்கக்கூட சகிக்காமல் நீ உயிரை நீத்தாய். ஆனால் நீ உயிர் நீத்தாய் என்று கேட்டும் இந்த வாழ்வை உகந்து இன்னும் இருக்கின்றேன். இது சரியோ). (2439) - - இவ்வாறு அழுது புலம்பும் இராமனுக்குப் பழைய நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாய் நினைவுக்கு வருகின்றன. "அறுபதினாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து, தேவர் பகைமுடிக்கும் ஆற்றலையும் பெற்று, இவனுக்கு இறுதியுண்டோ என்று கண்டார் வியக்கும் வண்ணம வாழ்ந்த உனக்கு நானல்லவோ எமனாக வந்தேன். அதுவும் அரசாட்சியை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னப்றகல்லவா உனக்கு இக்கதி
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/107
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை