90 38 இராமன் - பன்முக நோக்கில் ஏற்பட்டது” என்று கூறிவிட்டு மேலும் தொடர்கிறான். ‘ஐயனே ! உலகத்தில் உள்ள எல்லாப் பொருளும் தனக்கு வேண்டும் என்று நினைப்பவர்கட்டப் பொறுப்பு நிறைந்ததும், துன்பத்தை விளைப்பதுமான இந்த அரசாட்சி வேண்டாம் என்று கூறுவார்கள். அனைவரும் வெறுத்து ஒதுக்கும் இந்த ஆட்சியை நான் ஏற்றுக் கொண்டதனால் அன்றோ இவ்உலகத்திற்குப் பெருந்துன்பம் உண்டாக்கிவிட்டேன். நான் இப்பொழுதே இங்கேயே மாண்டு மடிந்தால் நலமாக இருக்கும். உயிரோடு இருந்து பதினான்கு ஆண்டுகள் கழித்து யாரைக் காண்பதற்காக நாட்டிற்குத் திரும்ப வேண்டும்?" (2438) என்ற பொருளில் பின்வரும் பாடலைக் கூறுகிறான். "வேண்டும் திறத்தாரும் வேண்டா அரசாட்சி பூண்டு, இவ்உலகுக்கு இடர்கொடுத்த புல்லனேன் மாண்டு முடிவது அல்லால், மாயா உடம்பு இதுகொண்டு ஆண்டுவருவது, இனி யார் முகத்தே நோக்கவோ?" - கம்ப. 2438 தந்தையின் வேண்டுகோளுக்கிணங்கி அதனை அரசு ஆணையாகவே மதித்து யாது கொற்றவன் ஏவியது', 'அதன் வழிநிற்றலே எனக்கு நீதியாகும்” என்று நினைத்துதானே அப்பணி தலைநின்றான் இராமன். ஆனால், என்ன காரணத்தாலோ அந்த வினாடியில் இருந்து துன்பங்கள் ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கிவரத் தொடங்கிவிட்டன. அன்பைக் கொட்டி வளர்த்த சிற்றன்னை பகைமை பூண்டுவிட்டாள். பதினாலு ஆண்டுகள் வனத்தில் வாழ வேண்டும் என்று கட்டளை இட்டாள். புறப்படும் பொழுது தன்பால் உயிரையே வைத்திருக்கும் தந்தையை நேரே கண்டு விடைபெறக்கூட முடியாமல் போய்விட்டது. அன்பே வடிவான இலக்குவன் ஒரு பாவமும் அறியாத பரதன்மேல் தீராப் பகைமை கொண்டுவிட்டான். அரண்மனைக் சுகபோகங்களை அனுபவிக்க வேண்டிய புதுப்பெண்ணாகிய சீதை கானகத்தில் கால்கடுக்க நடக்கும் நிலை அடைந்தாள்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/108
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை