தந்தையும் இராமனும்ேே 9| பெருமகன்ாகிய பரதன் சடை வளர்த்துத் துறவுக்கோலம் பூண்டுவிட்டான். தன்னை அல்லாமல் உயிர்வேறு இலாத தசரதன் வானம் புகுந்தான் என்ற இத்தனை எண்ணங்களும் இராமன் மனத்தில் தோன்றி மறைந்ததனால், வேண்டும் திறத்தாரும் வேண்டாத இந்த அரசாட்சியை ஏற்றுக் கொள்கிறேன் என்று தந்தையிடம் ஒப்புதல் தந்ததால்தானெ உலகத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும் இப்பெருந்துயர் தரநேர்ந்தது என்று கருதி மனம் அழுங்கிச் சோர்ந்து விடுகிறான், கோசல நாடுடை வள்ளல். வேண்டுதல் வேண்டாமை, விருப்பு வெறுப்பு, சுகம் துக்கம் ஆகிய அனைத்தையும் கடந்து சமதிருஷ்டியுடன் வாழும் இராகவனுக்குக் கூடவா இத்தனை கவலைகள்: மேலே காட்டிய இந்தச் சமநோக்கு எந்த ஒன்றுக்கும் தான் வருத்தப்படாமல் இருக்கும் நிலையைத் தருமே தவிரப் பிறருடைய துயரத்தை மாற்ற இவை உதவுமா என்பது ஆய்வுக்குரியதே ஆகும். வேண்டாமை அன்ன விழுச்செல்வம் மிக உயர்ந்ததாகலின் அந்த அடிப்படையில் அரசு வேண்டாம் என்று தான் சொல்லியிருந்தால் இத்துணைத் துன்பங்களும் வந்திராவே என்று நினைந்து வருந்துகிறான் இராகவன். மூத்த மகன் என்ற கடமை உணர்வால் தந்தைக்குப் பின் அரசோச்சுவது தனக்குரிய தவிர்க்கமுடியாத கடமை என்பதால்தானே அரசை ஏற்றுக்கொள்ளச் சம்மதம் தந்தான், அப்படி இருக்க, இப்பொழுது நான் அந்த முடிவுக்கு வந்ததால்தான் இத்தனை இடையூறுகளும், பலருக்குப் பலவிதமான துன்பங்களும் வந்துவிட்டன என்று வருந்துவது நியாயமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. இந்த வினாடிவரை உணர்ச்சிக்கு இடங்கொடாமல் அறவழி எதுவோ அதன்வழிச் செல்வதே தன்கடமை என்று வாழ்ந்து வருகிறான் இராமன். சிற்றன்னையின் மேலும், பரதன் மேலும் எல்லையற்ற சினம் கொண்டு அவர்களை அழிப்பேன் என்று உணர்ச்சில:சப்பட்டுப் பேசிய
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/109
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை