தாக்கங்கள் அவன் பரம்பொருள் என்பதால்தான். மிகவும் ஆழமாக அமைந்தன என்பது நன்கு விளக்கப் பட்டுள்ளது. தந்தையும் இராமனும் என்னும் பகுதியில் தயாதனுக்கும் இராமனுக்குமிடையே இருந்த அன்புப்பிணைப்பு விளக்கப் படுகிறது. இதில் தருவனத்துள்' என்னும் பாடல் நுண்ணிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பேராசிரியர் சொற்களின் வழியாகப் பாத்திரங்களின் மனத்தில் இறங்கி மனத்தின் அகல நீளங்களை அளந்து கூறும் உளநூற் கலைஞர் என்பதனை இதுபோன்ற இடங்கள் மெய்ப்பிக்கின்றன. இராமன் - பரசுராமன் சந்திப்பு அலசி ஆராயப்பட்டுள்ளது. பரசுராமப் படலம் யான் பலகால் படித்தது; பாடம் நடத்தியது. அதில் இவ்வளவு நுட்பம் பொதிந்து கிடக்கின்றதா' என்னும் வியப்பினை உண்டாக்குகிறது பேராசிரியரின் விளக்கம். வாங்குதி தனுவை' என்பதில் வளைப்பாய்' என்று பிறிதொரு பொருளும் பொதிந்திருக்கிறது என்பதனை அறியும் போது மனம் நம்மையறியாமல் ஆகா! ஆகா! என்று பாராட்டத் தொடங்கிவிடுகிறது. இராமன், தயரதன் இறந்த பொழுது சராசரி மனிதனாகப் படும் வருத்தம் நன்கு விரித்துரைக்கப்பட்டுள்ளது. கோசலை, சுமித்திரை, கைகேயி ஆகிய அன்னையர்களுக் கும் இராமனுக்குமிடையே நிகழ்ந்த சந்திப்புக்களும் உரையாடல்களும் அழகுறத் தாயரும் இராமனும் என்னும் பகுதியில் ஆராயப்படுகின்றன. என்னை நீங்கி இடர்க்கடல் வைகுறும் மன்னர் மன்னன் என்றும் தொடரால் இராமன் தன்னைக் காடேகச் செய்தது தயரதனல்லன் கைகேயியே என்பதனை உணர்ந்து கொண்டான் என்று காட்டுவது நுட்பமான செய்தி. வையம் ஈந்தும் போகா உயிர்த் தாயர் நம் பூங்குழல் சீதை' என்று சுமித்திரை கூறுவதுகொண்டு அவள் இராமனோடு சீதையும் செல்வாள் என்பதனை முன்கூட்டியே தன் அறிவுத்திறத்தால் முடிவுகட்டிவிட்டாள் என்று விளக்குவதும் அத்தகைய அரிய செய்தியே ஆகும். கைகேயியைக் காணச் சென்ற இராமனொடு இலக்குவன்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/11
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை