தந்தையும் இராமனும்ே 93 உறவினர்மேல் கொண்ட பாசத்தால் துயருறுதல், மனைவியைத் திருப்திப்படுத்துவதற்காகச் சிலவற்றைச் செய்தல் ஆகிய நிகழ்ச்சிகளைப் புகுத்தி, அவற்றில் ஈடுபடும் இராமனைப் பரம்பொருளாகக் கருதாமல், அவனை நம்முடையவனாக, நம் தோழனாகக் கருதுமாறு செய்துவிடுகிறான். இவ்வாறு இராமனை நம்மவனாக நினைத்துக் கொள்ளும் சூழ்நிலைகளை அங்கங்கே உருவாக்குவதால் கம்பன் படைத்த இராமனின் மதிப்புக் குறைந்துவிடுவதில்லை. அவனுடைய தெய்வத்தன்மைக்கு எவ்வித இழுக்கும் வந்துவிடுவதுமில்லை. அதனால்தான் தசரதன் இறந்தபொழுது இராமன் அடைந்த துயரத்தை இவ்வளவு விரிவாகப் பாடிக் காட்டுகிறான். இராமனைச் சாதாரண மனித நிலைக்குக் கொணர்ந்து தந்தைப் பாசம் அவனை எவ்வளவு தூரம் அவதியுறச் செய்தது என்பதைக் காட்டிய கவிஞன், அப்படித் துயர் உறும் சராசரி மனிதனுக்கு ஏனையோர் சமாதானம் சொல்வதுபோல இராமனுக்கு வசிட்டன் சமாதானம் கூறுவதாகச் சில பாடல்களை இயற்றி நம் போன்றவர்க்கு அறவுரை பகர்கின்றான் கவிஞன். "இறத்தலும் பிறத்தலும் இயற்கை" என்பதை மறத்தியோ, மறைகளின் வரம்பு கண்ட நீ" - கம்ப. 2444 "சிலமும், தருமமும், சிதைவு இல் செய்கையாய்! சூலமும், திகிரியும், சொல்லும், தாங்கிய மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும், காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ?" - கம்ப. 2447
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/111
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை