5. தாயரும் இராமனும் காப்பிய நாயகனான இராமனைப் பொறுத்தவரை பெற்ற தாய், வளர்த்த தாய் என்ற இருவர் உண்டு. கோசலை பெற்ற தாய், கைகேயி வளர்த்த தாய் என்பதை நாட்டுமக்கள் அனைவரும் அறிந்திருந்தனர் என்பதைத் 'தாய் கையில் வளர்ந்திலன், வளர்த்தது தவத்தால் கேகயன் மடந்தை (1591 என்ற பாடல் தொடரால் கம்பன் அறிவிக்கிறான். ஒருபெரும் குறை கம்பனது பால காவியத்தில் காணப்படும் ஒரு பெரும் குறையை இங்குச் சுட்டாமல் இருக்க முடியவில்லை. பிள்ளையே பெறாத பெரியாழ்வார் 8ஆம் நூற்றாண்டிலேயே கண்ணனைக் குழந்தையாக்கி நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடி, பின் 5 நூற்றாண்டுகள் கழித்துத் தோன்றப்போகும் பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தத்திற்கு வழிவகுத்து விட்டார். கண்ணன் வழிபாட்டில் அவனைக் குழந்தையாகக் கண்டு அவன் செய்யும் லீலைகளில் மனத்தைப் பறிகொடுத்து ஈடுபட்ட பல்லாயிரவர் தமிழ் நாட்டிலும் உண்டு, வடநாட்டிலும் உண்டு. 8ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய பூரீமத் பாகவதம் கண்ணன் லீலைகளைச் செப்பப் பெரும்பகுதியைச் செலவழிக்கின்றது. அப்படி இருக்க, கம்பநாடன் காப்பியத்தில் நால்வர் குழந்தைகளாய்த் தோன்றுகின்றனர். மூன்று தாயர் அவர்களை வளர்க்கின்றனர். தசரதனுக்கும் அவனுக்குகந்த அரசியான கைகேயிக்கும் செல்லப்பிள்ளையாக வளர்கிறான் கோசலைமைந்தன். பதினாயிரம் பாடல்களில் காப்பியத்தை அமைத்த
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/113
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை