பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 38 இராமன் - பன்முக நோக்கில் "குழைக்கின்ற கவரிஇன்றி, கொற்ற வெண்குடையும் இன்றி, இழைக்கின்ற விதிமுன்செல்ல, தருமம் பின் இரங்கி ஏக மழைக்குன்றம் அணையான் மெளலி கவிந்தனன் வரும் என்று என்று தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன், ஒரு தமியன் சென்றான். - கம்ப. 1606, மெளலியுடன் வரும் மகனை எதிர்பார்த்த தாய்க்கு, தமியனாக வந்த மகன் காட்சி அளித்ததை நினைக்கும் பொழுது யாப்பருங்கல விருத்தியில் வரும் ஒரு தொடர் மிகப் பொருத்தமாக நினைவுக்கு வருகிறது. "சாந்துஅகந்து உண்டுஎன்று செப்புத்திறந்து ஒருவன் பாம்பு அகத்து கண்டதுடைத்து" (யாப் பெருங்கல விருத்தி) பெற்ற உணர்வும் வளர்த்த உணர்வும் துயரத்தின் எல்லையில் நிற்கும் தாயைச் சென்று வணங்கினான் தனயனாகிய இராகவன். வணங்கிய மகனை மேலும் கீழும் பார்த்த தாய் புனித நீரால் நனைக்கப்படாமல் வறண்டு கிடக்கும் அவன் தலையையும், கிரீடம் சுமக்க வேண்டிய அத்தலை வெறுந்தலையாக இருப்பதையும் கண்டு தன் துயரத்தையெல்லாம் உள்ளடக்கிக் கொண்டு மிக அமைதியாக, "என்ன நினைத்து வந்தாய் மகனே! நீ நெடுமுடி புனைந்து கொள்வதற்கு இடையூறு ஏதேனும் உண்டோ?” என்று வினவினாள். அவளுடைய ஐயத்தைப் போக்க நினைத்த சக்கரவர்த்தியின் மூத்த திருமகன், அந்த வினாவிற்கு மட்டும் விடைகூறுகிறான். "நெடுமுடி புனைய இடையூறு ஒன்றுமில்லை. நான் புனைவதற்குப் பதிலாகத் தங்கள் ஆசை மகன் பரதன் புனைந்துகொள்ளப் போகிறான்" என்ற கருத்தில் விடைகூறினான், இராகவன்: