பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயரும் இராமனும் ே 99 "மங்கை அம்மொழி கூறலும் மாணவன் செங் கைகூப்பி, நின்காதல் திருமகன் பங்கம் இல்குணத்து எம்பி, பரதனே துங்கமாமுடி சூடுகின்றான்' என்றான்". - கம்ப.1608 ஈடு இணையற்ற தான் பெற்ற மகனை வளர்க்கத்தான் கொடுத்து வைக்கவில்லை; ஆனால், என்றாவது ஒருநாள் அவன் அரசனாவான் என்ற நினைவு கற்பனைக் கோட்டையாக அத்தாயின் உள்ளத்துள் எழுப்பப் பட்டிருந்ததில் புதுமை ஒன்றுமில்லை. அப்படிப்பட்ட சாதாரணத் தாய் இச் செய்தியைக் கேள்விப்பட்டிருந்தால் நெஞ்சு உடைந்திருப்பாள் என்பதில் ஐயமில்லை. ஆனால், தசரதனின் மூத்த மனைவியும், இந்தக் கோசல நாட்டின் உரிமையைப் பெற்றவரும், பரம்பொருளையே மகனாகப் பெற்றவரும் ஆன கோசலை இச்செய்தி கேட்டு மனம் உடைந்துவிடவில்லை. மிக அமைதியாக, "மகனே! மூத்தவன் இருக்க இளையவன் முடிசூடுதல் நம் மரபுக்கு ஏற்றதன்று என்ற ஒரு காரணத்தைத் தவிர, வேறுசிந்திக்க வேண்டியது எதுவுமில்லை. எல்லா நற்பண்புகளாலும் நிறைந்த உன் தம்பியாகிய பரதன் உன்னைவிட நல்லவன் என்பதில் ஐயமில்லை, எக்குறையும் இல்லாதவன்" என்று கூறினாளாம். கூறினவள் யார் என்று கூறவந்த கவிஞன், ஒன்றரை அடிகளில் கோசலையின் பண்புநலன் அனைத்தையும் முழுவதுமாகக் காட்டிவிடுகிறான். அந்த அற்புதமான பாடல் வருமாறு: "முறைமை அன்று என்பது ஒன்று உண்டு, மும்மையின் நிறை குணத்தவன் நின்னிலும் நல்லனால், குறைவு இலன் எனக்கூறினள் - நால்வர்க்கும் மறுஇல் அன்பினில், வேற்றுமை மாற்றினாள். - கம்ப. 1609. இவ்வாறு கூறியதுடன் அமையாமல், அந்த அற்புதத் தாய் மகனுக்கு அறிவுரை கூறுகிறாள்: "மகனே! அரசன்