100 38 இராமன் - பன்முக நோக்கில் நேரிடையாக உனக்கு ஆணை தரவில்லை என்று நினையாதே; யார்மூலம் அந்த ஆணை வந்திருந்தாலும் அதை நிறைவேற்றும் வகையில் ஆட்சியைத் தம்பியிடம் கொடுத்துவிட்டு, நீயும் தம்பியும் ஊழிக்காலம் வரை ஒன்றி வாழ்வீர்களாக" என்ற கருத்தில் அறவுரை பகர்ந்தாள். அப்பாடல் இதோ: "என்று, பின்னரும், மன்னவன் ஏவியது அன்று எணாமை, மகனே! உனக்கு அறன், நன்று, நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து, ஒன்றி வாழுதி, ஊழிபல' என்றாள்". - கம்ப. 1610 இராமனை நன்கு அறிந்திருப்பின், இந்த உபதேசம் தேவையே இல்லை. அப்படி இருந்தும் ஏன் இந்த அறவுரையைச் கோசலை பேசுகிறாள் என்று சிந்தித்தால், ஓர் உண்மை வெளிப்படும். பெற்ற கடமை தவிர, மகனை வளர்க்கின்ற பேறு பெறாமையால் அவனுடைய பண்பு நலன்கள் வளர்ச்சியைக் கோசலை அறியுமாறு இல்லை. பரதனைத்தான் அவள் வளர்த்தாள். அவள் நற்பண்புகளின் உறைவிடம் என்பதை அனுபவரீதியாகக் கண்டவள் என்பதால், நிறைகுணத்தவன் நின்னினும் நல்லனால் என்று அவளால் பரதனுக்கு நற்சான்றிதழ் கொடுக்க முடிகின்றது. கோசலையோடு அதிகம் தொடர்பில்லாமல் கைகேயினிடமே முழுவதுமாக இராகவன் இருந்து விட்டான் என்பதற்கு இந்த உரையாடல் ஒரு சான்றாகும். அதிராதவள் - பெற்ற அதிர்ச்சி இப்பொழுது அந்தப் பெற்ற தாயின் உணர்ச்சிகள் ஒருவாறு அடங்கி அமைதி பெற்றுவிட்டன. பரதன் முடிபுனைவதில் அவனை வளர்த்த அத்தாய்க்கு மகிழ்ச்சியே தவிர, வேறில்லை. இப்படி ஒரு சூழ்நிலை உருவாகிய பிறகுதான் மற்றொரு கொடுமை நிறைந்த அரசு ஆணையை அவளிட்ம் சொல்ல நினைத்தான் இராகவன். இரண்டு ஆணைகளையும் ஒரே நேரத்தில் சொல்லியிருந்தால் அந்தத்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/118
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை