ஏன் செல்லவில்லை என்பதற்குரிய காரணம் அரசி பிள்ளையைக் கொணர்க' என்று ஆணையிட்டதே என்னும் விளக்கம் ஐயங்களையும் நல்ல விடையாக அமைகிறது. காடேகுமாறு பணித்தது மன்னவன் பணி அன்று; நூம்பணி என்று கைகேயியிடம் இராமன் சொல்வதாக யோக வாசிஷ்ட இராமாயணத்தில் வரும் கருத்தினையும் பெறுமாறு கம்பநாடர் கவிதை அமைந்துள்ளது என்று குறிப்பது பேராசிரியரின் அங்கங்கே கலைகள் தேரும் மாட்சியைக் காட்டுவதாகும். தம்பியர்களின் பண்புகளையும் இராமன் அவர்கள்பால் கொண்டிருந்த நேயத்தினையும் அடுத்த கட்டுரை விளக்குகிறது. கரனை அழிப்பதற்கு இலக்குவனை விடுக்காமல் இராமன் தானே சென்றதற்குக் காரணம் யாது என்பது இப் பகுதியில் நுட்பமாக ஆய்ந்து எடுத்துக்காட்டப்படுகிறது. மூல இராமன் முன்கூட்டியே போரில் வில் ஒடிய வருணனிட மிருந்து விஷ்ணு தனுசை வாங்கும் சூழ்நிலை உருவாகும் என்பதனை அறிந்திருந்தான் என்றும் அதனைப் பெறும் உரிமை தன்னைத்தவிர இலக்குவனுக்கு இல்லை என்று கருதினான் என்றும் வரும்பகுதி புதிய விளக்கம். மாயமானைக் குறித்து இராம இலக்குவரிடையே நடைபெறும் வாக்குவாதம், அதில் புலப்படும் இலக்குவனின் அறிவுத்திறம் ஆகியவற்றை விளக்கி, தசரத இராமன் மனைவியின் ஆசையை நிறைவு செய்ய மானின் பின்னே போனான். மூல இராமன் தன் அவதார நோக்கத்தை நிறைவேற்றவே அவ்வாறு செய்தான் என்று பாகுபடுத்திக் காட்டுவது சிறப்பாக உள்ளது. கம்பரின் இராமகாதையில் தான் யார் என்பதனை இராமன் எங்கும் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே செயற்படுகிறான் என்று முடிவு காட்டி ஆனால் இதற்கு இசையாத வகையில் வருணனிடமிருந்து வில்லைப் பெறுவது போன்ற ஓரிரு நிகழ்ச்சிகள் நெருடலாக அமைகின்றன என்று குறிப்பது காமஞ்செப்பாது கண்டது மொழியும் நேர்மைத் திறனாய் வாகும்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/12
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை