தாயரும் இராமனும் ேே 103 வராதிருக்கவே இப்படி ஒரு பதிலை இராமன் கூறுகிறான்; அப்பாடல் வருமாறு: "விண்ணும் மண்ணும், இவ்வேலையும், மற்றும் வேறு எண்ணும் பூதம் எலாம் அழிந்து ஏகினும், அண்ணல் ஏவல் மறுக்க, அடியனேற்கு ஒண்ணுமோ? இதற்கு உள் அழியேல் என்றான்". - கம்ப. 1622 பஞ்ச பூதங்களும் நிலையில் கலங்கினாலும் தந்தையும், அரசனுமாக உள்ளவர் இட்ட கட்டளையை மீறுதல் என்பது நினைக்கவும் முடியாத காரியம் ஆகும் என்பதால் எக்காரணத்தைக் கொண்டும் தன்னை நிறுத்தக் கூடாது என்பதை மிகச் சிறந்த முறையில் விளக்கிவிட்டான். கோசல மன்னனின் புதல்வியாகப் பிறந்த அவள் தாய் துண்மையான அறிவும், குறிப்புணரும் ஆற்றலும் பெற்றிருந்தமையின் தன்னுடைய வியூகத்தை மாற்றிக் கொண்டு புதியதொரு பிரச்சனையை உண்டாக்குகிறாள். அந்தப் பிரச்சனையைச் சமாளிப்பதென்பது இராகவனுக்கே இக்கட்டானதாகி விடுகிறது. அவர் கூறியது என்ன? "ஆகின், ஐய! அரசன் தன் ஆணையால் ஏகல் என்பது யானும் உணரக்கிலென் சாகலா உயிர் தாங்க வல்லேனையும், போகின், நின்னொடும் கொண்டனை போகு' என்றாள். - கம்ப. 1623 முதல் பிரச்சனைக்கு விடைகூறுபவள் போல,"என் கணவன், உன் தந்தை என்ற உறவை நீக்கிவிட்டு அரசனின் ஆணை என்ற நோக்கில் அரசாணையை யாரும் கடக்க இயலாது. எனவே, உன்னைப் போகவேண்டாம் என்று சொல்லவில்லை. அப்படிப் போவதானால் நீ போவதை அறிந்தும் இன்னும் போகாது நிற்கும் உயிரைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற என்னையும் உடன் அழைத்துச் செல்வாயாக" என்று கூறிவிட்டாள்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/121
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை