104 38 இராமன் - பன்முக நோக்கில் கோசலையின் இந்த வேண்டுகோளைக் கேட்ட இராமன், அதனை மறுக்க முடியாத நிலையில், தாயின் மனம் எதனைச் சொன்னால் மாறும் என்று தன் நுண்ணிய அறிவால் ஆய்ந்து மிகக் குறிப்பாக ஒன்றைச் சொல்லுகிறான்: "என்னை நீங்கி இடர்க்கடல் வைகுறும் மன்னர் மன்னனை வற்புறுத்தாது, உடன் துன்னு கானம் தொடரத் துணிவதோ? அன்னையே! அறம் பார்க்கிலை ஆம்' என்றான்". - - கம்ப. 1624 "வரி வில் எம்பி இம் மண் அரசு ஆய், அவற்கு உரிமை மா நிலம் உற்றபின், கொற்றவன் திருவின் நீங்கித் தவம் செயும் நாள், உடன், அருமைநோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே!" r - கம்ப. 1825 "தாயே! என்னை விட்டுப் பிரிவதனால் துயரக் கடலில், விழுந்து எழ முடியாமல் தவிக்கும் மன்னர் மன்னனுக்கு ஆறுதல் கூற வேறு யார் உளர்?. இடர்படும் கணவனுக்கு உதவுவதுதான் கற்புடைய மனைவியின் முதல் கடமையாகும். அதுவே அறமும் ஆகும். அந்த அறத்தை மறந்து நீ என்னுடன் வரலாமா?” என்பது முதல் பாடலின் பொருளாகும். "பரதனுக்கு அரசைக் கொடுத்துவிட்டபின், தந்தை தனித்து விடுவார். அந்த வானப்பிரஸ்த நிலையில் அவருக்குதவியாக நீ இருக்க வேண்டும் அல்லவா?" என்பதே இரண்டாம் பாடலின் பொருளாகும். இந்த இரண்டு பாடல்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்த இரு பாடல்களும் வான்மீகியை ஒருவகையில் அடியொற்றி வந்தாலும், வான்மீகி வழியை (அயோ, காண்டம். 19 சருக்கம் -7 முதல்) விட்டுவிட்டு இராமனை ஈடுஇணையற்ற அறநெறியைக் கைப்பிடிப்பவனாகக் கம்பன் காட்டுகிறான். மூலநூலில் இராமனும் கைகேயியும் உரையாடுவது இருவர்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/122
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை