தாயரும் இராமனும் ேே 107 சிற்றன்னை சுமித்திரை தாய் கோசலையிடம் விடைபெற்றுக் கொண்டு நேராகச் சிற்றன்னை சுமித்திரையிடம் செல்கிறான். இடையில் இலக்குவன் பெருங்குழப்பத்தை உண்டாக்கி, எல்லையற்ற சினத்துடன் பேசிக் கொண்டிருக்கிறான். இதன் விரிவைத் தம்பியரும் இராமனும் என்ற தலைப்பில் காணலாம்) தம்பியின் கோபத்தைத் தணித்து, இராகவன் அவனை அணைத்துக் கொண்டு இலக்குவன் தாயும், தன் சிற்றன்னையுமான சுமித்திரை மாளிகைக்குள் புகுந்தான். நடந்ததைக் கேள்வியுற்ற சுமித்திரை அழுதாள், புரண்டாள், விழுந்தாள், கீழே விழுந்த அவளைத் துக்கிப் பிடித்துத் தன் தாயிடம் சொல்லியதைப் போலவே, இராகவன் பேசினான். “அன்னையே! சக்கரவர்த்தியைப் பொய்யராக்க விரும்பவில்லை நான். காட்டில் சென்று வாழ்ந்து விட்டு விரைவில் திரும்பிவிடுவேன்" என்றான். (1745) "தாயே! காட்டில் சென்று இடர்ப்படுவேன் என்று நினைக்க வேண்டாம். காடாக இருப்பினும், கடலாக இருப்பினும், ஆகாயத்தில் இருந்தாலும், அந்த இடங்கள் எனக்கு அயோத்தியாகவே இருக்கும். ஆதலால், தாங்கள் அஞ்சி வருந்த வேண்டியதில்லை" என்று பேசுகிறான். இந்நிலையில், கைகேயி கொடுத்து அனுப்பியதாகப் பணிப்பெண்கள் மரவுரியைக் கொண்டு வந்தனர். இலக்குவன் அதை வாங்கித் தாயின் திருவடிகளில் வைத்து வணங்கி, “எம்பிராட்டி துயரம் நீங்கி இராமனுடன் செல்வாயாக என்று கட்டளை இட்டால், அதையே நான் பெற்ற பெரும் பேறு என்று கருதுவேன்' என்றான் இளையோன். இப்பொழுது சுமித்திரை கூற்றாகக் கம்பன் பாடிய இரு பாடல்கள் உலக இலக்கியங்களில் இடம்பெற வேண்டிய சிறப்புடைய கவிதை ஆகும்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/125
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை