பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 - 38 இராமன் - பன்முக நோக்கில் "ஆகாதது அன்றால் உனக்கு, அவ் வனம் இவ்அயோத்தி, மா காதல் இராமன் நம்மன்னவன், வையம் ஈந்தும் போகா உயிர்த் தாயர் நம்பூங்குழல் சீதை - என்றே ஏகாய் இனி, இவ் வயின் நிற்றலும் ஏதம்' என்றாள்". - - கம்ப. 1751 "பின்னும்பகர்வாள், மகனே! இவன்பின்செல்; தம்பி என்னும்படி அன்று, அடியாரின் ஏவல் செய்தி மன்னும் நகர்க்கே இவன் வந்திடின், வா. அதுஅன்றேல், முன்னம் முடி" என்றனள், வார் விழி சோர நின்றாள்". - கம்ப. 1752 சுமித்திரை பெற்ற இருவரில் ஒருவன் இராகனோடும் ஒருவன் பரதனோடும் இணைந்துவிட்டனர். இராம இலக்குவர் இணைபிரியாது இருப்பதை அறிந்த சுமித்திரை தன் ஒரு மகனுக்கு இடும் கட்டளை இதுவாகும். அவன் மனத்தை நன்கு அறிந்திருந்தமையின், அவனை இராமனுடன் செல்லுமாறு கூறினாளா, அன்றி அதையே தன் விருப்பமாகக் கொண்டிருந்தாளா என்று சிந்தித்தால், இப்பாடல் அவள் மனநிலையை விளக்குகிறது. இதில் உள்ள ஒரு நுணுக்கத்தையும் காணவேண்டும். சுமித்திரையின் கூற்றாக "இராமனுக்கு வனம் ஏற்றதென்றால் உனக்கும் அது ஏற்றதே ஆகும். இனி உன் அன்பிற்குரிய இராமனே உன் தந்தையாகிய மன்னன் தசரதன் ஆவான். பூக்களை அணிந்த கூந்தலையுடைய அச்சீதையே, இத்தனை நடந்தும் உயிரை விடாமல் இருக்கின்ற உன் தாயரைப் போன்றவள் ஆவாள்" என்று கம்பன் கூறுகிறான். இந்த நிகழ்ச்சி நடைபெறும்பொழுது இராமன், சீதையைச் சந்திக்க வில்லை. அவளை உடன் அழைத்துச் செல்வதாக ஒப்பவும் இல்லை. அப்படி இருந்தும் அந்தச் சீதையே உனக்குத் தாயாவாள்' என்றால், இவர்கள் இருவரும் காடு சென்றால் உறுதியாகச் சீதையும் உடன் செல்வாள் என்பதைச் சுமித்திரை உணர்திருந்தாள் என்பதை அறிய முடிகிறது.