தாயரும் இராமனும் ே - 109 அடுத்தபடியாக, இரண்டாவது ஒர் ஆணையையும் பிறப்பிக்கிறாள், அந்த அன்னை. அந்த ஆணையின் அடிப்படையைச் சற்றுச் சிந்திக்க வேண்டும். தசரதபுத்திரர்கள் நால்வரும் அரச குமாரர்களே ஆவர். ஒருவருக்கொருவர் ஒருநாள் வித்தியாசத்தில் பிறந்தவர்கள். ஆயினும் மூத்தவனாகிய இராமனுக்குப் பரதன் முதலானவர்கள் இளையவர்கள் என்று சொல்லும் பொழுது, இவர்களிடையே மிக அதிகமான வயது வேறுபாடு இருக்கும் போலும் என்று நம்மை எண்ண வைக்கிறது கதைப் போக்கு முதலில் பிறந்தவனுக்கு அரசு உரிமை உண்டு என்பதைத் தவிர ஏனைய மூவருக்கும் அரசகுமாரர்களுக்குரிய உரிமை உண்டு என்பதை மறக்கக் கூடாது. அயோத்தியில் வளர்கின்றவரை இலக்குவன் முதலானவர்கள் தாங்களும் அரசகுமாரர்கள் என்ற எண்ணத்தில் வளர்ந்திருக்கலாம் அல்லவா? அன்றியும் அயோத்தியில் வாழுகின்றவரையில் ஒவ்வொருவருக்கும், பணியாளர்களுக்கும் எடுபிடி வேலை செய்யும் ஆள்களுக்கும் குறைவே இருந்திருக்காது. மூத்தவனாகிய இராமன் இளையவனாகிய இலக்குவனின் உதவியை நாடவேண்டிய தேவையே தோன்றியிருக்காது. ஆனால், இராமனோ வனம் செல்லப்போகிறான். பிராட்டியும் உடன் செல்லப் போகிறாள். வனத்திடை அவர்களுக்குத் துணை செய்ய யார் இருக்கப்போகிறார்கள்? ஒர் உதவியாளர் தயவில்லாமல் காட்டிடைக் கணவன் மனைவி வாழவே முடியாது. இலக்குவன் தன்னை வணங்கும் பொழுதே சுமித்திரை என்ற அந்தப் பெருமாட்டியின் உள்ளத்தில் இந்த எண்ணங்கள் தோன்றவே, அவள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள். அதன்படி முதற்பாடலில் 'இராமனுடன் செல்க' என்று கட்டளை இட்டாள். இரண்டாவது பாடலில் மற்றொரு உத்தரவு இடுகிறாள். "மகனே! இவன் பின்னே நீ செல்வாயாக. இளைய அரசகுமாரன் என்றோ, இராமனுக்குத் தம்பி என்றோ
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/127
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை