தாயரும் இராமனும் ேே 甘 வளர்த்த தாயும் மகனும் இராம காதையில் தசரதனுக்கு மிகவும் வேண்டப்பட்ட கைகேயி பற்றி வரும் பாடல்கள் அதிகமாகும். கோசலை, சுமித்திரை என்பவர்கள் பற்றிச் சொல்லும் பாடல்களை விடக் கைகேயி பற்றிச் சொல்லும் பாடல்கள் அதிகம். கைகேயி பற்றிப் பேச இது இடம் இல்லை என்றாலும், இராமனும் அவளும் சந்திக்கும் இடம்பற்றி மட்டும் இங்கே காணலாம். வரங்களைப் பெற்றுக்கொண்டபின் தசரதன் அவசமுற்றுக் கிடக்கும் நிலையில் வசிட்டன் ஆணையின்பேரில் தசரதனைத் தேடி வருகிறான் சுமந்திரன். பல இடங்களில் தேடியும் காணாமையால் கைகேயியின் அரண்மனை புகுந்தான் சுமந்திரன். 'அரசன் எங்கே என்று அவன் கேட்பதற்குமுன் அவளே முந்திக் கொண்டு, 'பிள்ளையைக் கொணர்க (1573) என்று ஆணியிட்டாள். நடந்ததை அறியாத சுமந்திரன், மகுடம் சூடப்போகும் மகனைப் பார்க்க வளர்த்த தாய் ஆசைப்பட்டாள் என்று நினைத்து, மகிழ்ச்சியோடு இராமனை அழைத்து வரச் சென்று விட்டான். சுமந்திரனோடு இராமன் மட்டும் வருகிறான். இணைபிரியாத் தம்பி என்ன ஆனான் என்று சிந்திக்கத் தோன்றுகிறதல்லவா? அவன் உடன் வரவில்லை. காரணம், அரசியின் உத்தரவு பிள்ளையைக் கொணர்க' என்று இருந்தமையின் இலக்குவனை உடன் அழைத்து வரவில்லை. தனியே வந்த இராகவன் முதலில் தந்தையைக் கண்டு வணங்க வேண்டும் என்ற எண்ணியும், அவனை எங்கேயும் காணாததால் கைகேயி அரண்மனை புகுந்து தந்தையைத் தேடத் தொடங்கினான் என்று சொல்லது முனைந்த கவிஞன் பயன்படுத்தும் சொற்கள் நம் சிந்தனையைத்துண்டுவனவாக உள்ளன.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/129
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை