கார்காலம் முடிந்தும் படையொடு வாராமல் அரண்மனையில் இன்ப நுகர்ச்சியில் இருந்த சுக்கிரீவனிடம் சீற்றம் கொள்ளும் இராமன் மனிதன் என்றும், அச் சுக்கிரீவன் தன்பால் வந்து வணங்கியபோது அவன் குற்றங்கள் எல்லா வற்றையும் மறந்து பரதன் நீ இணையன பகரற் பாலையோ? என்று கொண்டாடும் இராமன் தெய்வம் என்றும் காட்டுவது, வீடணனுக்கு அடைக்கலம் அளிக்கும்போது இராமன் பேசும் பேச்சுத் தசரதராமன் பேசிய பேச்சு என்பதனைவிட மூல இராமனின் பேச்சு என்று கொள்ள வேண்டும் என்று தெரிவிப்பது, போர்க்களத்தில் இலக்குவன் இந்திரசித்தனால் வீழ்ந்தபோது அதற்கு எவ்வகையிலும் பொறுப்பில்லாத வீடணனை கெடுத்தனை வீடணா!' என்று உணர்ச்சிவயப் பட்டுக் குற்றம் சுமத்திய இராமன் தன் செயலுக்குக் கழுவாய் தேடுவது போல, இலக்குவன் இந்திரசித்தனை அழித்துப் பெற்ற வெற்றியை அதில் குறிப்பிடத்தக்க அளவு உதவி செய்யாத வீடணனுக்குரியதாக்கி, வீடணன் தந்த வென்றி, ஈது என்று போற்றினான் என்று இரு நிகழ்ச்சிகளை இழைத்துக் காட்டி உண்மை தெருட்டுவது ஆகிய இடங்கள் எண்ணி எண்ணி மகிழத்தக்கன. அடுத்த கட்டுரையில் இராமனோடு சேர்ந்த சகோதரர் களின் இயல்புகள் ஆராயப்படுகின்றன. குகன் இராமன்பால் கொண்ட தாயன்பு, சுக்கிரீவன் சலனபுத்தி, அவன் ஐயத்தைப் போக்க மராமரத்தில் அம்பு எய்த தசரதராமனின் மாமனிதப் பண்பாடு, வீடணன் ஞான உயர்ச்சி, அவன் உதவிகள் ஆகியன விரிவாக ஆராயப்பட்டுள்ளன. 'பிராட்டியும் இராமனும் என்னும் பகுதியில், இராம இலக்குவர், தசரதன் புதல்வர் எனும் பெயரே காண் என்று விசுவாமித்திரன் கூறுவது எங்கே இராமன் தன் தந்தை தசரதன் போல் பல பெண்ணை மணக்கக் கூடியவனாய் இருப்பானோ என்னும் ஐயம் சனகன் உள்ளத்தில் தோன்றினால் அதனைக் களைவதற்கே என்று நுட்பமாக விளக்கம் தரப்பட்டுள்ளது. இராமன் சீதையைப் பார்த்து, நீ
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/13
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை