廿2 38 இராமன் - பன்முக நோக்கில் "ஆயன நிகழும் வேலை, அண்ணலும் அயர்ந்து தேடித் தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி, நாயகன் உரையான் வாயால், நான் இதுபகர்வென்"என்னா, தாய் எனநினைவான் முன்னே கூற்று எனத்தமியள் - வந்தாள்". - கம்ப. 1597 என்ற இப்பாடலின் முதலிரண்டு அடிகள் மிக ஆழமான பொருள் உடையன. ஆயன நிகழும் வேலை - பட்டாபி ஷேகத்திற்குரிய வேலைகள் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், அண்ணலும் - இராமனும்; அயர்ந்து தேடித் - தசரதனைத் தேடிக் காணாமையால் சோர்ந்து, உடன் தெளிந்து; தூயவன் இருந்த சூழல் - நல்லவனாகிய தசரதன் எந்தச் சூழலில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறான்,துருவினன் -துருவித்துருவி; வருதல் நோக்கி - தேடிக் கொண்டு வருதலைப் பார்த்து; நாயகன் உரையான் வாயால் - வருகின்ற இராமனை வரவேற்க்கும் ஒரு சொல்கூட சொல்லாமல் திடீரென்று தலைவனாகிய தசரதன் தன் வாய் திறந்து ஒன்றும் பேசமாட்டான்; "நான் இது பகர்வென் - நான் இப்போழுது சொல்லப் போகிறேன்", முடிசூட்டு விழாவிற்கான வேலைகள் பலவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அந்த நேரத்தில் இவற்றை ஏவுதற்கர்த்தாவாகிய தசரதன் அங்கேதான் இருப்பான் என்று நினைத்துச் சென்றான் இராமன். அங்கே அரசன் இல்லாததையும் தன்னைப்போலவே வசிட்டரும் மன்னனைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்பதையும் அறிந்து கொண்ட இராமனுக்கு நடக்கக் கூடாதது ஏதோ நடந்து விட்டது என்ற ஒர் உள்ளுணர்வு ஏற்பட்டதால் மனம் சோர்ந்து விட்டான். சமதிருஷ்டியுடன் பழகுகின்ற காரணத்தால் உடனே தெளிந்து விட்டான். இங்கே தசரதன் இருக்கவில்லையென்றால் சிற்றன்னையின் அரண்மனையில்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அங்கே சென்று அரசன் இருக்கக்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/130
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை