தாயரும் இராமனும் ே 1俗 கூடிய இடங்களிலெல்லாம் தேடியும் காணாமையால், அவன் இருக்கக்கூடும் என்று நினைக்க முடியாத இடங்களில்கூடத் துருவி ஆராயத் தொடங்கினான். எக்காரணத்தைக் கொண்டும் மயங்கிக் கிடக்கும் தசரதனை அவன் பார்த்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அவனிடம் பேசத் தொடங்கினாள் கைகேயி தன் வளர்ப்பு மகனிடம் நேற்றுவரை காட்டிய அன்பை அறவே துறந்துவிட்டு, இப்பொழுது பேசத் தொடங்குகிறாள் கைகேயி. 'விராவரும் புவிக்கெலாம் வேதமே என இராமனைப் பயந்தயெற்கு இடருண்டோ என்று பேசிய அதே கைகேயி இப்பொழுது இராமனிடம் ஒரு துளி அன்பு கூடக் காட் டாமல், 'அரசன் வாயால் உரைக்கமாட்டான்; நான் சொல்லுகிறேன்' என்று பகைவனிடம் பேசுவதுபோலப் பேசுவதைக் காண்கிறோம். 'மகனே !’ என்று அன்புடன் அழைத்துப் பேசத் தொடங்கினால் பழைய பாசம் வந்து தன்னை மூடிவிடும், தான் நினைத்ததைச் சொல்லமுடியாது என்ற காரணத்தினால் போலும் அன்பே இல்லாதவள்போல் பேசத் தொடங்கினாள். "அரசன் வாயினால் பேசான். அதனை நான் சொல்கிறேன்" என்று கைகேயி பேசியும், அவள் மேற்கொண்ட இந்தப் புதிய வடிவைப்பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் இதுநாள் வரை சிற்றன்னையைக் கண்டபொழுது எப்படி நடந்து கொண்டானோ அப்படியே நடந்துகொள்கிறான் இராமன் என்பதைக் கம்பன் மிக அற்புதமாக வடித்துக் கூறுகிறான். நேற்றுவரை தன்மாட்டு உயிரையே வைத்திருந்த ஒருத்தி இன்று திடீரென்று பெற்ற மாற்றமும், அன்பே கலவாத அவளது பேச்சும், தன் தந்தையைத் தேடி வந்திருக்கிறான் என்பதை அறிந்தும் தந்தையைப்பற்றி ஒரு சொல்கூடப் பேசாத மனநிலையும் கொண்ட ஒருத்தி எதிரே நின்றால், அதிர்ச்சியும் குழப்பமும் அடையாமல் யாரும் இருத்தல் இயலாது. அதுமட்டுமன்று, தன்னை ஒருவர் உதாசீனப்படுத்துகிறார் என்பதை அறிந்த போதிலும் பழையபடி அவரிடம் முன்போலவே பண்புடன் al-8
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/131
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை