114 38 இராமன் - பன்முக நோக்கில் நடந்துகொள்வது சாதாரண மனிதனுக்கு இயலாத காரியம். ஆனால், இராமன் மண்ணுற வணங்கி, வாய்பொத்தி, ஒரு கையால் உடையை மடக்கிக் கொண்டு, அவள் பேசுவதைக் கேட்கத் தயாராக உள்ளான் என்றால், இவன் சராசரி மனிதன் அல்லன், மாமனிதன்' என்பதை நன்கு விளக்கி விட்டான் கவிஞன். இதுவரையில் பார்த்த பல இடங்களிலும் இராமனிடம் பார்த்த தெய்வத் தன் மை யை வெளிப்படையாகவும், குறிப்பாகவும் கூறிக்கொண்டு வந்த கவிஞன் இந்தப் பாடலிலும், பின்வரும் பாடலிலும் (1598 - 1600) அந்த இறைத் தன்மையைத் துளிக் கூட வெளிக்காட்டவேயில்லை. ஒரு மனிதன் ஒரு பிழையும் செய்யாதிருக்கவும், அன்புக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்ளும் இயல்பைக் பெற்றிருந்தும் தான் அவமதிக்கப்படும் பொழுது அவமானத்தால் குன்றிப்போவதோ சினம்கொள்வதோ இயற்கை. இவ்விரண்டையும் செய்யாமல் எதுவுமே நடவாததுபோல் ஒருவன் நடந்துகொண்டால் அவனை மனித ஆத்மா என்று சொல்லாமல் பரமாத்மா என்று கீதை சொல்கிறது. பரமாத்மாவிற்குரிய இலக்கணங்களைச் சொல்ல வந்த கீதை புலன்களை வென்றவனும், எந்நிலையிலும் அமைதியோடு இருப்பவனும், வெப்பம் குளிர்ச்சி, சுகம் - துக்கம், மான - அவமானம் ஆகிய இரட்டைகளைச் d'Fffðlf)fT3E உணர்பவனுமாகிய ஒருவனே (Samlitah) பரமாத்மா, இங்குக் கூறப்பட்ட இரட்டைகளில் இறுதியாகச் சொல்லப்பட்ட மான அவமானம் என்ற இரண்டையும் ஒரே மனநிலையில் ஏற்றுக் கொள்வது என்பது மனிதனுக்கு இயலாத காரியம். இப்பொழுது சிற்றன்னையின் எதிரில் அவள் இழைத்த அவமானங்களையெல்லாம் ஒரு சிறிதும் மனங்கொள்ளாமல் கைகட்டி வாய்பொத்தி நிற்கின்ற இராமனைப் படம் பிடித்துக் காட்டும் இந்தப் பாடல் (1598) இராமனைப் பரமாத்மா என்று எண்ணுமாறு செய்துவிடுகின்றது.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/132
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை