தாயரும் இராமனும் ேே H5 இராமனைக் கடவுள் தன்மையும், மனிதத் தன்மையும் இணைந்த ஒரு பாத்திரமாகக் கம்பன் ஒருவன்தான் செய்கின்றான். வான்மீகி மனிதர்களுள் சிறந்தவனாகவே அவனைக் காட்டிச் செல்லும் பகுதிகள் நிரம்ப உண்டு. என்றாலும், பல இடங்களில் இராமனை அவ்வாறு நினைக்க முடியாமல் செய்துவிடுகின்றான். குறிப்பாக, இந்த இடத்தைப் பாடும் வான்மீகி (வான்மீகி - அயோ. காண்டம் 19 - சருக்கம் 7ஆவது பாடல்) கைகேயியுடன் இராமனை மிக நீளமாக உரையாடும்படிச் செய்வது இராமனின் தரத்தைக் குறைத்து விடுவதாக உள்ளது. சமதிருஷ்டி உள்ள மாமனிதனாக இராமனைப் இப் பாடலில் காட்டிய கம்பன் அதன் பிறகு கைகேயி பேசுவதைக் காட்டுவது பொருத்தமுடையதாக உள்ளது. இவ்வளவு பணிந்து காழ்ப்புணர்ச்சி ஒரு சிறிதும் இல்லாமல் தாயை வணங்கி நின்ற இராமனைக் கண்டதும் கைகேயிக்கே மனத்தில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டிருக்கும் போலும்! அதனைக் கூறவந்த கவிஞன் மைந்த' என்ற சொல்லினால் அதனைத் தெரிவிக்கின்றான். இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின், ஆகும், ஒன்று உனக்கு உந்தை, மைந்த உரைப்து ஓர்உரை உண்டு என்றாள்". - கம்ப. 1599 மிகக் கொடுமையாக மனத்தை இறுக்கிக் கொண்டாளேனும் தான் நினைத்ததைச் சொல்லக் கைகேயிக்குத் துணிவு எளிதிலே பிறக்கவில்லை. எனவே, நீட்டி முழக்கிச் சுற்றி வளைத்துத் தான் கருதியதைச் சொல்லத் தொடங்குகிறாள். “இன்று என்னுடைய மனத்தில் பொருத்தமானது என்று கருதிய ஒன்றை உனக்கு நான் சொல்வது பொருத்தம் என்று நீ கருதினால், உனக்கு உந்தை சொல்லிய சொல் ஒன்று இருப்பதைச் சொல்ல விரும்புகிறேன்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/133
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை