廿 36 இராமன் - பன்முக நோக்கில் சுற்றி வளைத்துப் பேசுவதையும் கைகேயி உள்ளத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தையும் இப் பாடலின் நடையமைப்பு உணர்த்துவதைக் காணலாம். சிற்றன்னையின் பேச்சுக்கு இராகவன் சொல்லும் விடை நயமானது: "எந்தையே ஏவ, நீரே உரைசெய இயைவது உண்டேல், உய்ந்தனென் அடியேன், என்னின் பிறந்தவர் உளரோ? வாழி! வந்தது, என்தவத்தின் ஆயவருபயன்; மற்று ஒன்று - உண்டோ? தந்தையும், தாயும், நீரே தலைநின்றேன்; பணிமின் என்றான்". ( கம்ப1600) இந்தப் பாடல் இராமன் கூறிய விடையாகும். நுண்ணறிவுடையவனாகிய இராமன், ஏறத்தாழ நடந்ததைப் புரிந்துக் கொண்டான் என்றாலும் அவனுடைய மனத்தில் எவ்விதச் சலனமும் ஏற்படவில்லை. முழுக் கர்மயோகியாக மாறிவிட்ட அவன், அவள் உள்ளம் குளிரத் தந்த விடையாகும் இது. இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. சொல்ல வந்ததை நேரிடையாகச் சொல்லாமல் நீண்ட முகவுரைக்குப்பின், சொல்ல விரும்புகிறேன்' என்று அவள் சுற்றிச் சுற்றி வருவதால் எந்த ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தாளோ அதைச் சொல்லும் மனோதிடம் அவளிடம் இல்லை என்பதை அறிந்துகொண்ட இராமன், அவள் அஞ்சத் தேவையில்லை என்ற கருத்துப்படப் பேசியதுதான் இப்பாடலின் அடிநாதமாகும். "என் தந்தை ஏவினார். அந்த ஏவலை நீங்கள் எனக்கு இப்பொழுது சொல்லப் போகிறீர்கள். பொருத்தமான இச்செயலால் அடியேன் உய்கதி அடைந்தேன். என்னைவிடப் பாக்கியம் செய்தவர் யாருமில்லை. இங்கே நான் வந்த முன்னர்ச் செய்த தவத்தின் பயனே ஆகும். இப்பொழுது எனக்குத் தந்தையாகவும் தாயாகவும் தாங்களே உள்ளீர்கள், கட்டளை இட்டு அருளுங்கள்” என்றான்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/134
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை