தாயரும் இராமனும் ேே 廿7 'எந்தையே ஏவ, நீரே உரைசெய இயைவது உண்டேல்' என்ற தொடர் பலவகையாகப் பொருள் கொள்ள நிற்கின்றது. இங்கு நடைபெறுவது இம்முறையில் அமையவில்லை. உரைசெய்தவன் தந்தை; ஏவினவள் தாய். இது பொருத்தமாகக் கூடிய நிலை இருக்குமானால் என்பதும் ஒரு பொருளாகும். தந்தையை நன்கு அறிந்தவன் ஆதலால், அவர் உரைத்ததும், தாய் ஏவியதும் முரண் உடையதாகத்தான் இருக்கும் என்ற கருத்தை இயைவது உண்டேல்' என்ற தொடரினால் பெற வைக்கிறான் கவிஞன். இவ்வாறு இரட்டுற மொழிந்து இரண்டு பொருள் கொள்ளுமாறு இப்பாடல் மட்டுமல்லாமல் மன்னவன் பணி அறைகின்’ (1604) என்ற பாடலும் அமைந்து இருப்பதைக் காணலாம். கைகேயியின் கூற்றாக வரும் 'ஆழிசூழ் உலகம் எல்லாம்' (1601) என்ற பாடல் உலகப் பிரசித்தமானது. ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய், தாழ்இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் r மேற்கொண்டு, பூழி வெங் காணம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி, ஏழ் - இரண்டு ஆண்டின் வா என்று, இயம்பினான்அரசன் எனறாள. - கம்ப. 1601 இப்பாடலின் இறுதிஅடி 'இயம்பினன் அரசன் என்று முடிவது சிந்திக்கத்தக்கது. ஆயன என்று தொடங்கும் (1597) பாட்டில் நாயகன் உரையான் வாயால் என்று தொடங்கிய சிற்றன்னை இதனை அடுத்த 2ஆவது பாடலிலேயே ஒன்று உனக்கு உந்தை, மைந்த உரைப்பது ஒர் உரை உண்டு என்று கூறுவதில், அரசன் என்ற பொருளில் வரும் நாயகன்' என்ற சொல்லைப் பயன்படுத்தி, அடுத்து உந்தை' என்ற சொல்லைப் பயன்படுத்தி, மூன்றாவது பாடலில் இயம்பினன் அரசன் என்று கூறும் கைகேயியின் அறிவுத் திறன் வியக்கத்தக்கதாகும். இராமன் மறுப்புக் கூறிவிடுவானோ என்ற அச்சத்தில் ‘நாயகன் உரையான் வாயால் என்று கூறினாள். அரசரில்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/135
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை