தாயரும் இராமனும் ே 廿21 முகத்தைக் கண்டவுடன் இப்படியொன்றை அவனுக்குச் செய்ய வேண்டுமா என்று குழம்பி நாயகன் உரையான் என்று தொடங்கி, உந்தை உனக்கு உரைப்பது ஒன்று உண்டு என்று தொடர்ந்தாள். பிறகு தான் சொல்லப்போவது கொடுமையாக இருப்பினும் அதன் விளைவு நலன் பயக்கும் என்று கருதினவள்போல் இது அரசன் ஆணை என்று கூறி முடித்துவிட்டாள். குழம்பிய மனம் எதனால் தெளிவடைந்தது என்பதைக் கவிஞன் கூறவில்லை. இராமன் வடிவில் எதிரே நிற்கும் அவள் அன்பு மகனின் அந்தராத்மாவாக இயங்கும் பரம்பொருளின் அவதார நோக்கம் நடைபெற வேண்டுமானால், கைகேயி குழப்பத்தைத் தவிர்த்து அவளுக்கு நெஞ்சு உரத்தை ஏற்படுத்தி இக்கடுஞ் சொற்களைச் சொல்லுமாறு ஊழ்வினை செய்துவிட்டது என்று கொள்வதில் தவறில்லை. இயம்பினன் அரசன்’ என்ற இரண்டு சொற்களுக்கும் உள்ள தொனிப்பொருளைச் சிந்தித்தால் ஒர் உண்மை விளங்கும். கடைக்கண் அருள் வழியத்துங்குகின்றவளும் (1448)துமொழி மடமானும் (1484 நாடக மயிலும் (1494 ஆகிய ஒருத்தி, 'இயம்பினன் அரசன் என்று சொல்வதில் உள்ள தொனியைச் சிந்தித்தால் நன்கு விளங்கும். 'அன்பு மகனே! இது நான் விரும்பிச் செய்யும் காரியமன்று. அரசன் ஆணையை உனக்குச் சொல்ல வேண்டிய கடப்பாட்டில் உள்ளேன்' என்ற கருத்துப்பட, நான் சொல்லவில்லை, அரசன் இப்படிச் சொன்னான்' என்று கூறி முடித்தாள் போலும். இதே கருத்தை மனத்துட் கொண்டவன் போலக் கம்பநாடான், "அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும், துரக்க, நல்அருள் துறந்தனள் தூமொழி மடமான்" - கம்ப. 1484 என்று பாடுவதால் கைகேயி பற்றிக் கவிஞன் என்ன பாடுகிறான் என்று தெரிகிறது. கைகேயி எதிரே நிற்கும் இராகவனின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறான் கவிஞன்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/139
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை