122 38 இராமன் - பன்முக நோக்கில் "இப்பொழுது, எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? யாரும் செப்பஅருங் குணத்து இராமன் திருமுகச்செவ்விநோக்கின் ஒப்பதே முன்புபின்பு அவ்வாசகம்உணரக் கேட்ட அப்பொழுது, அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா!" - கம்ப 1802 என்பது அப்பாடல். கை, வாய், முகம் அனைத்தும் தாமரை போன்றுள்ளவன், இராகவன். கையும், வாயும் புறத்தே காணப்படும் அழகுபற்றித் தாமரைக்கு உவமையாயின. வடிவு, நிறம் பற்றி வந்த உவமையாகும் இவை. திருமுகம் என்பது வேறு விஷயம். கரிய நிறமுடைய பெருமானின் முகத்தை வடிவு, நிறம் என்பது பற்றித் தாமரைக்கு உவமிக்க முடியாது. அம் முகத்தில் உள்ள கண்கள், கருணை வெள்ளம் பொழியும் கண்கள். ஆழ்வார் கூற்றுப்படி, "கடலினும் பெரியவாய அக்கண்கள்" தாமரையோடு பல்வகையிலும் உவமிக்கப் படத் தக்கவை. முகம் முழுவதற்கும் அறிகுறியாக நிற்கும் அக்கண்கள் காரணமாக முகமே கமலம் என்று வருணிக்கப் பட்டது. தாமரை போன்ற வடிவும், தேன் பிலிற்றும் குணமும், கண், முகம் என்பவற்றின் வடிவிற்கும் கருணை பொழியும் குணத்திற்கும் உவமை ஆயின. இவை புறத்தே உள்ளவர்கட்கும் காட்சிதரும் இயல்புடையவை. அதைத்தான் கவிஞன் 'திருமுகச் செவ்வி என்கிறான். தாமரை முழு மலர்ச்சி அடைந்து கண்ணையும், மனத்தையும் கவரும் இயல்பினைப் பெறுவத அது தோன்றி வளரும் மண்ணின் தன்மையைப் பொறுத்ததாகும், அனைத்து வளங்களும் நிறைந்த மண்ணாக இருப்பின், அதில் தோன்றி விளரும் தாமரை ஈடுஇணையற்றதாய் அழகுடன் மிளிர்ந்து தேனைச் சொரியும். ஆனால், அந்த மண் வளம் தாமரையின் மலர்ச்சியைக் கொண்டு அறியப்படுமே தவிர, நீருக்குள் இருக்கும் மண்ணின் தரத்தை வேறுவகையால் அறியமுடியாது. அதேபோன்று இராமன் கண்களில் காணப்படும் அந்த ஈடு இணையற்ற
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/140
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை