124 38 இராமன் - பன்முக நோக்கில் அழகையும் ரசிக்க முடியும். இடமும் கோணமும் மாறினால் அழகின் தன்மையில் குறைவும் நிறைவும் ஏற்படும். அப்படியானால் அதனைக் காண்பதற்குரிய சிறந்த இடத்தையும், கோணத்தையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்த இடத்தில் இருந்து பார்க்கும்பொழுது முழு அழகும். தென்படும் என்பது உண்மை தான். அ ப் படிப் பார்த்துக்கொண்டே இருக்கும் பொழுது திடீரென்று, பளிச்சென்ற சிறப்புடன் சில கணங்கள் அந்த அழகு பழைய அழகை வென்று நிற்பதைக் காணலாம். இந்தப் புதிய அழகு எங்கிருந்து வந்தது; மலரின் அழகைக் காண்பதற்கு உதவியது கதிரவனின் ஒளிக்கற்றைகளே ஆகும். வினாடிக்கு வினாடி இடம் பெயர்ந்து கொண்டிருக்கும் கதிரவன் ஒளி ஒரே கோணத்தில் தாமரை மேல் படிவதில்லை. அதன் கோணம் மாறிக் கொண்டேயிருக்கும். குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அவ்ஒளிக் கற்றைகள் தாமரைமேல் படும்பொழுது அதன் அழகுபன் மடங்காகி, பழைய அழகைத் தோற்கடித்து விடும். ஆனால், இது எந்நேரமும் நீடிப்பதில்லை. ஒரு சில வினாடிகளே இது நிற்கும். கதிரவன் நகர்ந்தவுடன் ஒளிக்கற்றைகள் கோணம் மாறுவதால் இவ்வழகு மறைந்துவிடும். பழைய அழகை வெற்றிகொள்ள இப்புத்தழகு ஒருசில கணங்கள் தோன்றிப் பின்னர் மறைவதால் பழைய அழகே நிலைபெற்று நிற்கும். விஞ்ஞான ரீதியாக மேலே கூறப்பெற்றவற்றை மனத்தில் வாங்கிக்கொண்டு மட்டும் பாடலைப் பார்த்தால், கவிச்சக்கரவர்த்தி கம்பனின் பேராற்றலை நன்கு அறிய முடியும். இராமன் எதிரே நிற்கின்றான். நாம் அவன் எதிரே நின்று அப்பொழுது அலர்ந்த தாமரையின் செவ்வியை அம்முகத்தில் கண்டு மெய்மறந்து நிற்கின்றோம். எந்த நேரத்தில், இராகவன் முகத்தை யார் பார்த்தாலும் இந்த நிலைதான். அதாவது, அலர்ந்த செந்தாமரையின் செவ்வி அங்கே இருக்கும். இதைத்தான் கவிஞன் ஒப்பதே முன்பு என்று குறிக்கிறான். கதிரவன் இடம் பெயர்வதால் ஒளிக்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/142
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை