126 38 இராமன் - பன்முக நோக்கில் காண்கிறான் கவிஞன். வேளாண்மை செய்கின்ற வெண்ணெய்ச் சடையன் வீட்டில் தங்கி இருந்ததால் வண்டியில் பூட்டும் கா ைள க ைள, அ ைவ பூட்டப்படும்பொழுதும் பிறகு அவிழித்துவிடப்படும் பொழுதும் கவிஞன் நன்கு கவனித்திருக்கிறான். அந்தக்காட்சி இப்பொழுது அவன் கண்முன் நிற்கிறது. பொறுப்பை இராமனுக்கு ஏற்றியபொழுதும் அந்தப் பொறுப்பை இறக்கியபொழுதும் அவனுடைய முகச் செவ்வியைக் கற்பனையில் காணுகிறான். வண்டியில் பூட்டி அவிழ்த்து விடப்பெற்ற அந்த எருதுகட்கும், இராமனுக்கும் உள்ள ஒற்றுமை பளிச்சென்று அவன் மனத்தில் படுகின்றது. வண்டியில் பூட்டப்படுவதும், அவிழ்த்துவிடப்படுவதும் எருதுகளின் இச்சை அன்று. அவை அப்பணியை ஏற்றுக்கொள்கின்றனவா, மறுக்கின்றனவா என்று யாரும் எருதைக் கேட்பதில்லை. அதேபோல, முடியை ஏற்றுக் கொள்ளச் சொன்ன பொழுதும், அதை மறுத்து விட்ட பொழுதும் யாரும் இராமனுடைய விருப்பம் என்ன என்று கேட்கவில்லை. - என்றாலும், அவிழ்த்து விடப்பட்டபோது எருதுகளின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியும், திருப்தியும் வாசகம் உணரக்கேட்ட இராமன் முகத்தில் தோன்றின என்கிறான் கவிஞன். "தெருளுடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி, இருளுடைஉலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான், உருளுடைச் சகடம் பூண்ட, உடையவன் உய்த்த கார்ஏறு அருளுடை ஒருவன் நீக்க, அப்பிணி அவிழ்ந்தது. ஒத்தான்". . கம்ப. 1608 பாடலின் பின் இரண்டு அடிகள் இராமன் வாழ்க்கையில் நடைபெற்ற ஒன்றைக் குறிப்பாகச் சுட்டுகின்றன. எவனோ ஒருவன் எருதுகளை வண்டியில் பூட்டினான். எவனோ
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/144
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை