128 38 இராமன் - பன்முக நோக்கில் கோசல நாடு அடியவனாகிய நான் (கோசல மன்னனுக்குரியது ஆதலாலும், அம்மன்னனின் மகள் கெளசல்யையை என் தந்தை மணந்த பொழுது என் தாய்க்குக் கொடுத்த சீதனம் ஆதலாலும்) பெற்றதன்றோ? தாய்க்குச் சீதனமாக வந்த இக்கோசலம் முறைப்படி நான் பெறவேண்டியதே ஆகும். அப்படி உரிமையாக நான் பெற்ற செல்வத்தைத் தான் இப்பொழுது என் பின்னவனாகிய பரதன் பெற்றுள்ளான்" என்ற பொருள்படவும் கவிஞன் பாடியுள்ளமை காணலாம். இவ்வாறு கூறுவதால், புருஷோத்தமனான இராமன் பெருமை பெரிதும் தாழ்ந்துவிடும் என்பதைக் கவிஞன் அறியாதவன் அல்லன். அவன் காலத்து வழங்கிய பல்வேறு இராமாயணங்களில் யோகவாசிஷ்ட இராமாயணமும் ஒன்று. அதில் வருகிறது. இக்கருத்து. அந்த இராமாயணங்கள் இராமனைப் பரம்பொருளாகக் காட்டவில்லை. மிகச் சிறந்த மனிதன் என்ற அடிப்படையிலேயே பாடிச் செல்கின்றனர். மேலும் அவற்றில் தசரதன் மூர்ச்சை அடைந்து விட்டதாகவும், இராகவன் அவனைக் காணமுடியவில்லை என்பதாகவும் கம் பன் கூறியதுபோல் காட்டப் படவில்லை. இவ்வார்த்தைகளைக் கைகேயி கூறும்பொழுது, தசரதன் அவளை எதிர்த்துப் பேசமுடியாமல் வாய் மூடி இருந்துவிடுகிறான். அந்த நிலையில் இப்படிப் பொருள் கொள்வது நியாயமானதே ஆகும். அந்த இராமாயணங்களின்படி தசரதன் இரண்டு குற்றங்களைச் செய்கிறான். தனக்கு உரிமை இல்லாததும், தன் மனைவி கோசலைக்குச் சொந்தமானதுமான கோசல நாட்டை கைகேயியை மணக்க வேண்டும் என்ற விருப்பத்தில் கேகேய நாட்டு மன்னனிடத்தில் இராஜசுல்கமாகத் தருவதாகச் சொல்வது முதல் தவறு. வரம் என்ற பெயரில் பரதனுக்குக் கோசலத்தைக் கேட்டபொழுது, கோசலத்தின் உரிமை தனக்கில்லை என்று தெரிந்திருந்தும் அதனைத் தருகிறேன் என்று கைகேயியினிடம் கூறியது இரண்டாவது குற்றம், அந்த இராமாயணங்கள் இராமனை மனிதனாகவே காட்டுவதால் இந்த அரசியலில் நடைபெறும் இந்தத் திருகுகளை இராமன்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/146
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை