தாயரும் இராமனும் ே 129 நன்கு அறிந்திருந்தான். அவன் பெருந்தன்மை காரணமாகச் சற்று விட்டுக்கொடுத்தான் என்ற கருத்தில் பாடிச் செல்கின்றார். கம்பன் இவற்றை நன்கு அறிந்திருந்தான். ஆயினும் இதில் உள்ள நியாயத்தை அவன் மறுக்க முடியாது என்ற காரணத்தால் முதல் குற்றமாகிய இராஜ சுல்கம் நிகழ்ச்சியையே கூறாமல் விட்டுவிட்டான். தசரதன் எத்தனை தவறுகள் செய்திருந்தாலும் பரம்பொருளை மகனாகப் பெறும் பேறு பெற்றவன். ஆதலால் அவன் மேல் குற்றம் வராதபடி கம்பன் பாடிச் செல்கிறான். இராமனுடைய பண்பிற்குப் பழுது வரக்கூடாது என்று கம்பன் நினைத்திருந்தால் இப்படி இரண்டு பொருள்பட ஏன் பாடவேண்டும் என்ற வினா தோன்றுகின்றதல்லவா? அவன் காலச் சூழ்நிலையில் இருந்த எல்லா இராமாயணங்களையும் கம்பன் கற்றிந்தான்; ஆதலால் அவை கூறும் சில இடங்கள் சரியானவையே என்று அவன் மனத்தில் பட்டிருக்க வேண்டும். அவற்றின் தாக்கம் அவனைச் சும்மா விடவில்லை. தான் படைத்த இராமனுக்கு ஒரு தரக்குறைவு ஏற்படும் என்பதைக்கூட மறந்து விடுகிறான். அதன் பயனாகவே இருபொருள்படும் இப்பாடல் தோன்றிற்று என்று நினைப்பதில் தவறில்லை. இத்தனையும் நடந்த பிறகும் இராகவன் என்ன செய்தான் என்பதை மிக அற்புதமாகக் கவிஞன் பாடிச்செல்கிறான். மறுபடியும் சிற்றன்னையை வணங்கிய இராகவன், தந்தை அரண்மனையில் எங்கோ ஒரு பகுதியில் அவசமுற்றுக் கிடக்கிறான் என்பதை மனத்துட்கொண்டு உத்தேசமாக அத்திசை நோக்கி நின்று தந்தைக்கு ஒரு வணக்கம் செலுத்திவிட்டுக் கோசலை கோயில் புகுந்தானாம். "என்றுகொண்டு இணையகூறி, அடிஇணை இறைஞ்சி, - மீட்டும், தன்துணைத் தாதை பாதம் அத்திசை நோக்கித் தாழ்ந்து. பொன்திணி போதினாளும், பூமியும், புலம்பிநைய, குன்றினும் உயர்ந்த தோளான் கோசலை கோயில்புக்கான்" - கம்ப. 1695 al-Q
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/147
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை