பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f30 38 இராமன் - பன்முக நோக்கில் கைகேயியை விட்டு இராமன் வருகின்றபோது அங்கே யார் இருந்தார்கள்? இந்த நிலையை உண்டாக்கிய கைகேயி மட்டும் தான் இருந்தாள்; எங்கோ அறையில் தசரதன் மயக்கத்துடன் படுத்துக் கிடக்கிறான் என்றுதானே நாம் நினைப்போம்? இல்லை என்கிறான் கவிஞன். கண்ணுக்குப் புலனாகின்ற இவ்விருவர் தவிர, புலனாகாத இரண்டு பெண்கள் அங்கே அழுதுகொண்டு நிற்கின்றனராம். தாமரையில் உள்ள இலக்குமியும், பூமிதேவியும் மனம் நைந்து உருகி அங்கேயே கைகேயி மனையிலேயே நின்றுவிட்டனராம். முடிசூட்டு விழாவிற்கு நாள் வைத்ததிலிருந்து கண்காணா இருவர் மாறிமாறி இராமனுடன் உள்ளனர் என்கிறான் கவிஞன . கோசலையை நோக்கித் தனியனாக வரும் இராமனைப் பற்றிச் சொல்லும் கவிஞன், “ இழைக்கின்ற விதி முன் செல்ல, தருமம் பின் இரங்கி ஏக இராமன் வந்தான்" (1605) என்றான், இப்பொழுது கைகேயியை விட்டு விலகும் பொழுது இலக்குமியும், பூமிதேவியும் அழுதுநின்றனர் என்று கூறுகிறான். இந்த நால்வருமே நம் கண்ணுக்குத் தெரியாமல் செயல் புரிகின்றவர் ஆவர். o முடிவாக பெற்ற தாய் ஒருத்தி, பேணி வளர்த்த தாய் ஒருத்தி; நிலைமை அறிந்து கைங்கரியச் செல்வனாக மகனை உதவிய தாய் ஒருத்தி. ஆக, தாயர் மூவரைப் பெற்ற இராகவன்பால் அம்மூவரும் கொண்ட தொடர்பும் காட்டிய பாசமும் துலங்குகின்ற பல குறிப்புகளை இதுவரையில் கண்டோம். சுருக்கமாகத் தொகுத்துக் கண்டு இக்கட்டுரையை முடிப்போம். தான் பெற்ற மகனை இளையாள் வளர்க்குமாறு விடுத்து அவள் பெற்ற மகனைத் தான் வளர்த்தாள் மூத்த அரசியாகிய கோசலை. நின்னினும் நல்லன் என்று கூறி இராமனைவிடப் பண்பினால் உயர்ந்தவன் பரதன் என்று இராமனிடமே கூறி, அன்பினில் வேற்றுமை மாற்றினவள் தான் என்பதைப் புலப்படுத்தினாள் மணிவயிறு வாய்த்த கோசலை.